சினிமா / TV

மனைவியுடன் விவாகரத்து…? ஏறி மிதிப்பாங்க – தீயாய் பரவும் செல்வராகவன் பதிவு!

தரமான திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக பார்க்கப்பட்டவர் தான் செல்வராகவன். இவர் காதல் கொண்டேன் திரைப்படத்தை இயக்கி இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

முதல் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை , யாரடி நீ மோகினி ,ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், மாலை நேரத்து மயக்கம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கி இருக்கிறார் .

மேலும் சில திரைப்படங்களில் மிகச்சிறந்த கதாபாத்திரம் ஏற்றும் நடித்திருக்கிறார். தனுஷ் நடிப்பில் வெளிவந்த ராயன் திரைப்படத்தில் செல்வராகவன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் செல்வராகவன் கடந்த 2006 ஆம் ஆண்டு நடிகை சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2019 விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள்.

அதன் பிறகு 2011 ஆம் ஆண்டு தன்னுடைய உதவி இயக்குனர் ஆன கீதாஞ்சலி ராமன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லீலாவதி, ஓம்கர், ரிஷிகேஷ் என மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்.

தொடர்ந்து திரைப்படங்கள் எடுப்பதிலும் , நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வரும் செல்வராகவன் சமீபத்தில் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு போட்டு இருக்கிறார். அந்த பதிவு தற்போது தீயாய் பரவி வருகிறது. அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது.

காதல் தோல்வியோ, மனைவியுடன் சிக்கலோ, வேலையில் பிரச்சனையோ, எந்த காரணத்தை கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள். இந்த உலகம் உங்களை ஏறி மிதித்து விட்டுப் போகுமே தவிர அந்த நேரத்தில் ஆறுதல் சொல்லாது.

இதையும் படியுங்கள்: அஜித்தை அவமானப்படுத்திய இயக்குனர் – காத்திருந்து பதிலடி கொடுத்த அஜித் – என்ன செய்தார் தெரியுமா?

செருப்பை போட்டுக் கொண்டு கடமையை செய்ய கிளம்பி விடுங்கள் என செல்வராகவன் கூறி பதிவிட்டு இருக்கிறார். அவரின் இந்த பதிவுக்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்த வருகிறார்கள்.

தனுஷ் -ஐஸ்வர்யா, ஜிவி பிரகாஷ் ,- சைந்தவி, ஜெயம் ரவி – ஆர்த்தி இப்படி அடுத்தடுத்து நட்சத்திர ஜோடிகளின் விவாகரத்து செய்திகள் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சமயத்தில் செல்வராகவனின் இது போன்ற பதிவு தற்போது கவனம் ஈர்த்து இருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஏன் இது போன்று இந்த சமயத்தில் போட்டு இருக்கிறார் என்ற ஒரு கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது.

Anitha

Recent Posts

விளக்கு பிடிச்சாங்களா? விஜய்யை விமர்சித்த சத்யராஜ் மகளுக்கு பிரபலம் பதிலடி!

சமீபத்தில் திமுகவில் சேர்ந்து புதிய பதவிக்கு தேர்வான சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ், ஒரு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய்யை…

14 seconds ago

பெண்களை நிர்வாணப்படுத்தி ஆபாச வீடியோ எடுத்து விற்பனை.. கொட்டிய பணம் : சிக்கிய கும்பல்!

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பழைய நகரத்தை சேர்ந்த கணேஷ், ஜோஸ்னாவும் வேலைக்காக பெங்களூரு சென்றனர். இவர்களுக்கு அனந்தபூர் மாவட்டம் குந்தகல்லை…

38 minutes ago

வயசு மட்டும் இடிக்குது… விக்ரமின் மருமகளாகிறார் அந்த நடிகை.?!!

நடிகர் விக்ரம் கடின உழைப்புக்கு பெயர் போனவர். பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வந்த விக்ரம், தனக்கான வாய்ப்பை தேடி…

56 minutes ago

கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?

சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…

15 hours ago

ஒரே ஒரு டயலாக் பேசுனது குத்தமா? ஷூட்டிங் ஸ்பாட்டில் லெஃப்ட் ரைட் வாங்கிய கவுண்டமணி…

கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…

16 hours ago

விஜய் டிவி VJ பிரியங்காவுக்கு சைலண்டாக நடந்த 2வது திருமணம்? வெளியான புகைப்படம்!

விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…

17 hours ago

This website uses cookies.