ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது நடித்து வருகின்றார். சமீபத்தில் விக்ரம் திரைப்படம் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் வெளியான மாபெரும் வெற்றிபெற்றது. இனி படங்களில் கமல்ஹாசன் நடிப்பாரா என்ற கேள்விக்கு விக்ரம் படத்தின் வெற்றி சரியான பதிலாடியாக அமைந்தது.
மேலும் விக்ரம் படம் வசூலிலும் சாதனை படைத்தது. இந்நிலையில் விக்ரம் படத்தை அடுத்து பல பங்களில் நடிக்க உலகநாயகன் கமல்ஹாசன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார். அந்தவகையில், மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படம், பின்பு லோகேஷ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவுள்ள கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில், கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதை அடுத்து கமல்ஹாசன் நடிப்பில் மீண்டும் துவங்கப்பட இருந்த இந்தியன் 2 இரண்டாம் பாகம் கடந்த 2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு பின்பு பல பிரச்சனைகளால் கிடைப்பில் போடப்பட்டது.
பின்பு தற்போது மீண்டும் துவங்கப்பட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இந்தியன் 2 இரண்டாம் பாகத்தில், படப்பிடிப்பின் போது நடந்த ஸ்வாரஸ்யமான சம்பவம் ஒன்று வெளியாகி உள்ளது.
இந்தியன் கதையை ரஜினியை மனதில் வைத்து சங்கர் எழுதியதாகவும், ஒரு காட்சியில் கமல்ஹாசன் நடித்துக்கொண்டிருக்கும் போது இதை ரஜினி நடித்தால் எப்படி இருக்கும் என நினைத்ததாகவும், ஆனால் அதை கமலிடம் சொல்ல தனக்கு தயக்கமாக இருந்த நிலையில், இதை புரிந்துகொண்ட கமல் அவர் ஸ்டைலில் நடித்து அனைவரையும் அசத்தினார் என ஷங்கர் தெரிவித்துள்ளாராம். இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படம் அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.