5 டாப் ஹீரோக்களுக்கு மறுவாழ்வு கொடுத்த இயக்குனர் ஷங்கர் – தெய்வமாக கும்பிடும் விக்ரம்!
Author: Rajesh3 February 2024, 4:40 pm
இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் இயக்குனர் ஷங்கர். இவரின் படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இவரது படங்களில் நடிக்கும் நடிகர்கள் மிகப்பெரிய உச்சத்தை தொட்டுவிடுவார்கள். அந்தவகையில் 5 டாப் ஹீரோக்களுக்கு மறுவாழ்வு கொடுத்துள்ளார் ஷங்கர். அது யார் யார் என்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
நடிகர் பிரபு தேவா:
நடன இயக்குனராக தனது வேலையை செய்துவந்த பிரபு தேவா மிகப்பெரிய ஹீரோ ஆனது ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த காதலன் படத்தில் தான். அந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது.
நடிகர் பிரசாந்த்:
தொடர்ந்து காதல் படங்களில் நடித்துவந்த பிரசாந்த்திற்கு மாபெரும் வெற்றி கொடுத்து டாப் ஹீரோவாக
மகுடம் சூட்டியது ஜீன்ஸ் திரைப்படம் தான்.
நடிகர் அர்ஜுன்:
நடிகர் அஜூனை மக்கள் ஹீரோவாக ஏற்றுக்கொள்ளவே பல காலம் ஆச்சு. எப்படியாவது மக்கள் மனதில் பிரபலம் ஆகவேண்டும் என்ற முனைப்புடன் ஓடிக்கொண்டிருந்த அர்ஜுனை வைத்து நாட்டுப்பற்று திரைப்படத்தை இயக்கி அவரது தலையெழுத்தையே மாற்றி எழுதியவர் ஷங்கர் தான். இன்று வரை முதல்வன் திரைப்படம் பலரது பேவரைட் படமாக உள்ளது.
நடிகர் விக்ரம்:
நடிகர் விக்ரமின் திறமைகளை வெளியுலகத்திற்கு கொண்டு வந்தவர் இயக்குனர் ஷங்கர் தான். இவர்கள் காம்போவில் வெளிவந்து உலக சாதனை பெற்ற திரைப்படம் ஐ. விக்ரம் மிகவும் திறமையான நடிகர் என இந்த படத்தின் மூலம் தான் பாராட்டப்பட்டார்.
நடிகர் ரஜினிகாந்த் :
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பெரும் புகழும் பெயரும் பெற்று தந்தது சந்திரமுகி. அந்த படத்திற்கு பிறகு பெரிதாக வாய்ப்புக்கள் இல்லாமல் இருந்த ரஜினிக்கு சிவாஜி படத்தை இயக்கி மாபெரும் ஹிட் கொடுத்தார் இயக்குனர் ஷங்கர்