இயக்குனர் சொன்னதால் நடிகருக்கு தூக்க மாத்திரை தந்த மனைவி; இயக்குனர் ஓபன் டாக்..
Author: Sudha12 July 2024, 11:53 am
பாலிவுட்டின் முன்னணி ஹீரோ நடிகர் சயிஃப் அலி கான் நடிகை அம்ரிதா சிங்கை காதலித்து 1991ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சயிஃப் அலி கானை விட அம்ரிதா பெரியவர் என்பதால் அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது.ஆனாலும் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
சில வருடங்களுக்கு முன்பு அம்ரிதா மற்றும் சயீப் அலிகான் இருவரும் பிரிந்து விட்டனர். பின்பு சயீப் அலிகான், கரீனா கபூரை திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் சயிஃப் அலி கானுக்கு அம்ரிதா சிங் தூக்க மாத்திரைகள் கொடுத்தது பற்றி பாலிவுட் திரையுலகத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
சூரஜ் பர்ஜாத்யா இயக்கத்தில் சல்மான் கான், சயிஃப் அலி கான், தபு உள்ளிட்டோர் நடித்த ஹம் சாத் சாத் ஹைன் படம் கடந்த 1999ம் ஆண்டு ரிலீஸாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
இந்த பட ஷூட்டிங் சமயத்தில் சயிஃப் அலி கான் நிறைய பிரச்சினைகளில் இருந்திருக்கிறார்.அதனால் அவர் எப்பொழுதும் டென்ஷனாக இருந்தார். சுனோஜி துல்ஹன் பாடலை ஷூட் செய்தபோது சயிஃப் நிறைய ரீடேக் வாங்கினார். அவர் இரவு நேரத்தில் தூங்காமல் இருந்ததால் தான் இப்படி நடந்து கொள்கிறார் என முதல் மனைவி சொல்லியுள்ளார்.
எனவே அவருக்கு இரவு தூங்கும் போது தூக்க மாத்திரையை கொடுக்கும் படி இயக்குனர், அம்ரிதாவிடம் சொல்லியிருக்கிறார். அம்ரிதாவும் அவ்வாறே செய்திருக்கிறார். அடுத்த நாள் நன்றாக தூங்கி எழுந்து ஃப்ரெஷ் ஆக வந்து எல்லா காட்சிகளையும் ஒரே டேக்கில் நடித்து கொடுத்திருக்கிறார் சயீப் அலிகான்.
இதை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டார் இயக்குனர் சூரஜ் பாத்யாயா. தூக்க மாத்திரை விவகாரம் இப்போது வைரலாகி வருகிறது.