அஜித்தின் படப்பிடிப்பின் போது தற்கொலை முடிவு எடுத்த பிரபல இயக்குனர்..! நடந்தது இதுதானாம்..! வெளியான அதிர்ச்சி தகவல்..!

Author: Vignesh
6 December 2022, 2:00 pm

நடிகர் எஸ்.ஜே.சூர்யா தான் இயக்கிய முதல் படமான ‘வாலி’ படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின் போது… தற்கொலை முடிவை எடுத்ததாக, யாருக்கும் தெரியாத ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ஆகவேண்டும் என்கிற ஆசையோடு தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் எஸ்.ஜே.சூர்யா… ஆனால் காலத்தின் கட்டாயத்தால் துணை இயக்குனராக மாறினார். இயக்குனர் மற்றும் நடிகருமான பாண்டியராஜ், இயக்குனர் வசந்த், சபாபதி ஆயோருடன் துணை இயக்குனராக பணியாற்றிய இவர், சில படங்களில் சிறு வேடங்களிலும் நடித்துள்ளார்.

s j surya updatenews360

இயக்குனர் வசந்த் இயக்கிய ‘ஆசை’ படத்தில் துணை இயக்குனராக பணியாற்றிய போது… தன்னிடம் அன்பாக பழகிய அஜித்தை வைத்து படம் இயக்க நினைத்த எஸ்.ஜே.சூர்யா அஜித்திடம் ‘வாலி’ பட கதையை கூற… கதை அஜித்துக்கு பிடித்து போனதால் அவரும் நடிக்க ஒப்புக்கொண்டார்.

அஜித் ஹீரோ என்பதால், தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி இந்த படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டார். மேலும் அஜித்துக்கு ஜோடியாக அப்போது ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த, சிம்ரனை ஒப்பந்தம் செய்தார். இரண்டாவது ஹீரோயினாக ஜோதிகாவும், காமெடியனாக விவேக் உள்ள பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

ajith updatenews360

அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்த படம் 1999 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது மட்டும் இன்றி 100 நாட்கள் ஓடிய படம் என்கிற பெருமையையும் பெற்றது. இந்நிலையில் இந்த படம் குறித்து பலருக்கும் தெரியாத தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

அதாவது இந்த படத்தின் முதல் நாள் ஷூட்டிங் அடையாறு போட்கிளவுஸில் நடத்த திட்டமிட்டிருந்தாராம் எஸ்.ஜே.சூர்யா… ஆனால் திடீர் என அந்த வீட்டின் உரிமையாளர் தன்னுடைய வீட்டிற்கு சில முக்கிய உறவினர்கள் வர உள்ளனர். எனவே படப்பிடிப்பை மற்றொரு நாள் வைத்து கொள்ளுங்கள் என எஸ்.ஜே.சூர்யாவிடம் கூறியுள்ளார்.

s j surya - updatenews360

இந்த செய்தி எஸ்.ஜே.சூர்யாவின் தலையில் இடியை இறக்கியது போல் இருந்துள்ளது. காரணம், சினிமாவை பொறுத்தவரை ஆரம்பமே ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால் அபசகுனம் என கூறி, சில தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் ரிஜெக்ட் செய்துவிடுவார்கள். இதனால் மிகவும் பயந்து போன எஸ்.ஜே.சூர்யா இது என்னுடை முதல் படம் சார், இந்த படத்திற்காக பல நாள் உழைத்திருக்கிறேன் என தான் பட்டகஷ்டங்களை கூறியுள்ளார்.

s j surya - updatenews360

ஆனால், அந்த வீட்டின் உரிமையாளர் தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கவே.. ஒரு கட்டத்தில் கண் கலங்கியபடி, சரி சார் நீங்க வீடு தரவேண்டாம், நாளை காலை உங்க வீட்டு ஜன்னல் வழியாக பாருங்கள் அந்த மரத்தில் தன்னுடைய பிணம் தொங்கும் என கூறியுள்ளார். பின்னர் எஸ்.ஏ.சூர்யாவின் நிலைமையை புரிந்து கொண்ட அந்த வீட்டின் உரிமையாளர், வேறு எதோ ஏற்பாடுகள் செய்து வீட்டை சொன்ன படி படப்பிடிப்புக்கு கொடுத்துள்ளார். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 473

    0

    0