இப்படி ஒரு சோகத்தை காட்ட தைரியம் வேணும்… மாரி செல்வராஜை பாராட்டிய சுதா கொங்கரா!

Author:
26 August 2024, 6:33 pm

வாழ்க்கையின் வலிகளையும் வேதனைகளையும் எதார்த்தத்தையும் வெளிப்படுத்தும் தமிழ்த்திரையுலகில் சிறந்த படைப்பாளியான மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் வாழை. பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி முதல் படத்திலேயே ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்கச் செய்தவர் மாரி செல்வராஜ்.

அடிதட்டு மக்களின் ஜாதிய அடிப்படையில் வெளிவந்திருந்த இந்த திரைப்படம் மேல் சாதியினரின் அடாவடித்தனத்தையும், ஆணவத்தையும் தோலுரித்துக் காட்டியது. முதல் படத்திலிருந்து மிகப்பெரிய அளவில் பெயரும் புகழும் சம்பாதித்த மாரி செல்வராஜ் தொடர்ந்து அடுத்ததாக தனுஷை வைத்து கர்ணன் திரைப்படத்தை இயக்கினார்.

பின்னர் உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றியை பெற்று பல பாராட்டுகளை பெற்றார். தொடர்ந்து ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய கருத்தை மிகவும் ஆழமாக பதிவு செய்து வரும் மாரி செல்வராஜ் தற்போது வாழை என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படம் மாரி செல்வராஜ் தனது சிறு வயது வாழ்க்கையை மையப்படுத்தி…வலிகளையும் வேதனைகளையும் உள்ளடக்கி எடுத்து இருக்கிறார்.

இப்படத்தில் மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நடந்த சந்தோஷமான தருணங்களையும் மிக முக்கியமான நிகழ்வுகளையும் பேசும் என கூறப்படுகிறது. தேனி ஈஸ்வரர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் நிகிலா விமல் ,திவ்யா துரைசாமி, பிரியங்கா மற்றும் சில சிறுவர்கள் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படம் வெளியாகி திரையங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தை சுதா கொங்கரா அற்புதமான படத்தை இயக்கிய மாரி செல்வராஜுக்கு என்னுடைய பாராட்டுக்கள் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த மிகவும் துயரமான சோகமான சம்பவத்தை எல்லாம் இதுபோன்ற திரையில் லட்சக்கணக்கான மக்களுக்கு காட்டுவதற்காகவே ஒரு தைரியம் வேண்டும். அந்த தைரியம் மாரி செல்வராஜ் போன்ற இயக்குனர்களுக்கு மட்டும்தான் உண்டு என வெகுவாக பாராட்டியுள்ளார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 145

    0

    0