போலீசின் கைககளில் நடிகர் கார்த்தி; வியப்பில் தமிழ் ரசிகர்கள்

Author: Sudha
2 July 2024, 10:19 am

போலீஸாக இருந்து நடிகர் மற்றும் இயக்குனராக மாறியவர் தமிழ். சினிமா ஆர்வத்தினால் இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகச் சேர விரும்பி சென்னை வந்தார்.ஆனால் வெற்றி மாறனோ அவரை வடசென்னையில் நடிகராக்கி அழகு பார்த்தார் தொடர்ந்து ‘ஜெய் பீம்’, ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என அடுத்தடுத்து பல படங்களில் புது பரிமாணத்தில் தன் நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார்

இடையில் இயக்குனர் ஆசைக்கு தீனி போடும் விதமாக விக்ரம் பிரபுவை வைத்து ‘டாணாக்காரன்’ என்ற படத்தை இயக்கினார்.
காவல்துறையில் பணியாற்றும் போது தனக்கு கிடைத்த அனுபவங்களை வைத்து அங்கு நடக்கும் சிறு பிரச்சினைகளை துணிந்து திரைப்படமாக தந்திருந்தார். விக்ரம் பிரபு அவர்களின் சினிமா வாழ்விலும் இந்த டாணாக்கரான் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

இனி இவரின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் கார்த்தி.

இந்த திரைப்படத்திற்கான பிரீ புரொடக்ஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார் இயக்குனர் தமிழ்

  • Sex is for pleasure, not for having a baby: Famous actress's bold comment உடலுறவு என்பது மகிழ்ச்சிக்காக.. குழந்தை பெற்றுக்கொள்ள அல்ல : பிரபல நடிகை அதிரடி கருத்து!