நெல்லையில், நாங்குநேரி பெருந்தெரு ஆதிராவிடர் குடியிருப்பிற்குள் ஆயுதங்களோடு புகுந்து பனிரெண்டாம் வகுப்பு மாணவன் சின்னதுரை மற்றும் அவனது தமக்கை சந்திராதேவி ஆகியோர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
இந்த தாக்குதலில் சின்னதுரை மற்றும் அவரது தங்கை சந்திராதேவி படுகாயமடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்4 நபர்கள், மற்றும் முன்னாள் மாணவர்கள்2 நபர்களையும் கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இதுபோன்ற ஜாதி வன்மம் நடைபெறுவதற்கு ஜாதிய பிரச்சனையிலான படங்கள் எடுக்கப்படுவதே முக்கிய காரணம் என்றும், அழிந்துபோன ஜாதி பிரச்சனைகளை மாரி செல்வராஜ். மோகன் ஜி போன்ற இயக்குனர்கள் மீண்டும் தோண்டி எடுத்து வன்மத்தை தூண்டிவிடுகிறார்கள் என பலர் சமூகஅக்கறையாளர்கள் எதிர்ப்புகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் பிரபல திரைப்பட இயக்குனரான தங்கர் பச்சான், நாங்குநேரி சம்பவம் உலக அவமானம். அதை என்னால் ட்விட்டரில் எழுத முடியவில்லை. யாரைப் பார்த்து எழுத? யாரைப் பார்த்து கேட்க? யார் இதற்கு காரணமோ அவர்களே அதற்கு பரிசு கொடுக்குறாங்க. ஒரு திரைப்படம் என்றால் இரு பிரிவினரை இணைக்கவேண்டும்., பிரித்து பகையை உண்டாக்க கூடாது. அப்படி எந்த ஒரு படமும் வெளியானதில்லை. ‘ஜாதி பெருமை, ஜாதி அடக்குமுறை குறையும் மாதிரி திரைப்படங்கள் எடுக்க வேண்டும். ஜாதிய வன்மத்தை வளர்த்துட்டு போகும் படங்கள் எடுக்கவே கூடாது. இனிமேலது இதுபோன்று படம் எடுப்பவர்கள் திருந்துங்கள். சமூகத்தை தவறான வழிகளில் கொண்டு செல்லாதீர்கள் என கொந்தளித்து பேசியிருந்தார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.