வடிவேலு படப்பிடிப்புத் தளத்தில் மிகவும் திமிராக நடந்துகொள்வார் எனவும் தன்னுடன் நடிக்கும் ஜூனியர் காமெடி நடிகர்களை மரியாதை இல்லாமல் நடத்துவார் எனவும் அவர் மீது பல புகார்கள் இருக்கின்றன. இந்த நிலையில் “கேங்கர்ஸ்” திரைப்படத்திற்கான புரொமோஷன் பேட்டி ஒன்றில் பேசிய வடிவேலு தனக்கும் ஒரு பிரபல இயக்குனருக்கும் இடையே நடந்த சம்பவத்தை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.
ஹரி இயக்கிய “ஐயா” திரைப்படத்தில் வடிவேலுவின் காமெடி காட்சி ஒன்றை நாம் பார்த்திருப்போம். அதாவது ஒருவர் கையில் அரிவாளுடன் திரையரங்கிற்கு வருவார். திரையரங்கு உரிமையாளரான வடிவேலுவிடம், “என் பொண்டாட்டியை இன்னொருத்தன் தள்ளிட்டு வந்து படம் பாக்குறான்” என வம்பு பண்ணுவார்.
அப்போது வடிவேலு திரையரங்கிற்குள் ஓடிக்கொண்டிருந்த படத்தை அப்படியே நிப்பாட்டி ஒலிபெருக்கியில் “யாரோ ஒரு பொண்ணு அவளுடைய புருஷனுக்கு தெரியாமல் படம் பார்க்க வந்திருக்கிறாள். நான் ஒரு நிமிடம் லைட்டை ஆஃப் பண்ண சொல்றேன். அந்த கேப்ல நீ வெளில ஓடிப்போய்டு” என்று சொல்லி லைட் ஆஃப் செய்வார். பார்த்தால் இரண்டு ஜோடிகளை தவிர மற்ற அனைவரும் ஓடிப்போயிருப்பார்கள். இந்த காமெடி காட்சி மிகப் பிரபலமான காமெடி காட்சி ஆகும்.
ஆனால் இந்த காமெடி காட்சியை முதலில் இயக்குனர் வேறு மாதிரியாக எழுதி வைத்திருந்தாராம். அதாவது அரிவாளோடு வருபவர் திரையரங்கு வாசலில் நின்று அவனது பொண்டாட்டியை கத்தி கூப்பிடுவது போல் எழுதியிருந்தாராம். இதில் காமெடியே இல்லை என்று எண்ணிய வடிவேலு இயக்குனரிடம், “அரிவாளோடு வருபவன் என்னை மிரட்டுவது போல் மாற்றிக்கொள்ளலாம். யார்டா தியேட்டர் ஓனரு. என் பொண்டாட்டி இன்னொருத்தன் கூட வந்து படம் பாத்துட்டு இருக்கா. அவள உள்ள விட்டுட்டு நீ வெளிலவா உட்கார்ந்திருக்க என அவன் கேட்க, அதற்கு நான் உன் பொண்டாட்டி யார்னு எனக்கு எப்படியா தெரியும். இன்டர்வெல் வரப்போகுதுயா, இன்டெர்வெல்ல வெளில விடுறேன் என சொல்கிறேன்” என்று வடிவேலு அந்த காட்சியை விவரிக்க படப்பிடிப்பு தளத்தில் உள்ள அனைவரும் வடிவேலுவின் காமெடிக்கு சிரித்து விட்டார்களாம்.
அப்போது அனைவரையும் முறைத்துப் பார்த்த இயக்குனர், “நான் சொல்றதை நீங்க ஒரு வார்த்தை கூட கேட்க மாட்டிக்கீங்களே” என்று கோபமாக பேசினாராம். அதற்கு வடிவேலு, “அதான் எல்லோரும் நல்லா இருக்கு என்று சிரிக்கிறார்களே. இப்படி காட்சி இருந்தால் நன்றாக இருக்குமே” என்று கூறினாராம்.
அதற்கு இயக்குனர், “இப்படித்தான் வரும்போதெல்லாம் நீங்க வம்பு பண்றீங்க” என்று சொன்னாராம். இது வடிவேலுவை காயப்படுத்திவிட்டதாம். “வம்பு பண்றேனா? ரைட்டு தம்பி, நீங்க படம் எடுத்துக்கோங்க, நான் வரேன்” என்று கும்பிடு போட்டு வடிவேலு வீட்டிற்கு கிளம்பிவிட்டாராம். அதன் பிறகு இயக்குனர் வடிவேலுவிடம் மன்னிப்பு கேட்டு திரும்ப அழைத்து வந்தாராம். இந்த செய்தி வெளியே கசிந்துவிட செய்தித்தாள்களில், “வடிவேலுவின் அட்டகாசம், வடிவேலுவின் திமிர் பேச்சு” என்று போட்டுவிட்டார்களாம். “இப்படியே கெட்ட பெயர் வாங்குவதுதான் என்னுடைய வேலை” என்று மிகவும் மனம் நொந்தபடி அப்பேட்டியில் பேசியுள்ளார் வடிவேலு.
விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான ஜோடியாக வலம் வந்தவர்கள் அமீர் மற்றும் பாவ்னி. பிக் பாஸ் நிகழ்ச்சியில்…
நான் காலி… “வாயை மூடி பேசவும்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஷான் ரோல்டன். இவர்…
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர்சிங்கர் 5 சீசனில் பாப்புலரானவர் பூஜா வெங்கட். டாப் 5 லிஸ்டில் வந்த அவர், கடைசியில்…
சுந்தர் சி-வடிவேலு காம்போ கிட்டத்தட்ட 15 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து நடித்து இன்று உலகம்…
பகல்காம் தீவிரவாதிகள் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். எந்த மதம் என கேட்டு தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்திய…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பெரும்பாலனவை மாகாபா மற்றும் பிரியங்கா தான் தொகுப்பாளராக இருப்பார்கள். இவர்கள் செய்யும் நையாண்டி, அட்ராசிட்டிஸ்களுக்கு…
This website uses cookies.