அழுதே படத்தை கெடுத்துட்டாங்க… ஜோதிகாவை நினைத்து புலம்பும் இயக்குனர்!

Author: Shree
1 November 2023, 6:25 pm

சூர்யா நடிப்பில் என். கிருஷ்ணன் இயக்கத்தில் 2006ஆம் ஆண்டு வெளிவந்து பட்டையை கிளப்பிய திரைப்படம் ஜில்லுனு ஒரு காதல். இத்திரைப்படத்தில் சூர்யா, ஜோதிகா, பூமிகா சௌலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சூர்யா, ஜோதிகாவை அவர்களுக்கு விருப்பம் இல்லாத திருமணத்திற்கு கட்டாயப்படுத்துவதாக கதை. ஆரம்பத்தில் எதிரும், புதிருமாக இருக்கும் சூர்யா – ஜோதிகா ஜோடி பின்னர் அழகிய காதல் ஜோடியாக மகிழ்ச்சியாக வருவார்கள்.

இப்படத்தில் குந்தவி என்ற கேரக்டரில் நடித்த ஜோதிகாவின் நடிப்பை ரசிகர்கள் பலரும் வெகுவாக பாராட்டினார்கள். மனைவி அமைந்தால் இப்படி ஒரு மனைவி தான் வேண்டும் என பல வாலிப வட்டங்கள் ஏங்கி கிடந்தது. அந்த அளவிற்கு கணவனை புரிந்துக்கொண்டு காதலிக்கும் மனைவியாக ஜோதிகா சிறப்பாக நடித்திருப்பார்.

இந்நிலையில் இப்படத்தின் அனுபவத்தை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் என். கிருஷ்ணன், இப்படத்தில் சூர்யாவின் பழைய காதலை டைரி மூலம் படித்து தெரிந்துக்கொள்ளும் ஜோதிகா, முன்னாள் காதலியான பூமிகாவை வீட்டிற்கு வரவைத்து ஒருநாள் விட்டு செல்வார். அந்த காட்சியில் அவர் மனம் குமுறி அழுதுவிட்டு விடைபெறுவார். இந்த காட்சியில் ஜோதிகாவின் நடிப்பு இயக்குனர் கிருஷ்ணாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். உடனே ரீடேக் கேட்க, ஜோதிகாவோ நான் இன்னொரு முறை கூட நடிக்கிறேன் பிரச்சனை இல்லை. ஆனால் இந்த டேக் வேண்டாம் என்பதற்கான காரணத்தை சொல்லுங்கள் என கேட்டாராம்.

அதற்கு இயக்குனர் கிருஷ்ணன், ” அது இல்லை நீங்கள் பழைய காதலியோடு தன் கணவரை விட்டுவிட்டு செல்கிறீர்கள். ஆனால் நீங்கள் அழுதபடி சென்றால் அவர் எப்படி இருப்பார். ஏனென்றால் அவரும் உங்களை காதலிக்கிறார். எனவே அழுகாமல் நடியுங்கள் என சொல்லியிருக்கிறார். ஜோதிகாவும் அப்படியே நடித்தாராம். அந்த காட்சியை எடிட்டிங் செய்யும்போது அங்கிருந்தவர்கள் பார்த்து கைதட்ட… அட அந்த காட்சி இல்லை. ரீடேக் காட்சி இருக்கு அத எடுத்து போடுங்க என சொன்னாராம். ஆனால் படக்குழு ஜோதிகா அழுது நடித்ததே சூப்பரா இருக்கு. அதுவே போடலாம் எனக்கூற இயக்குனர் அப்படியே செய்தாராம். ஆனால், அந்த காட்சி தியேட்டரில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால் படத்தை ஜோதிகா அழுது கெடுத்துவிட்டுட்டது போல் இருந்தது என இயக்குனர் கிருஷ்ணன் கூறி புலம்பியிருக்கிறார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 500

    5

    4