உன்னை நடிகை ஆக்கினதே நான் தான்… ஐஸ்வர்யா ராஜேஷை கிழித்து தொங்கவிட்ட இயக்குனர்!
Author: Rajesh31 January 2024, 4:54 pm
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் டஸ்கி ஸ்கின் அழகை கொண்டு ஹீரோயினுக்கு ஏத்த பார்முலாவையே மாற்றி எழுதி யாரும் அசைக்க முடியாத இடத்தை பிடித்துவிட்டார். இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு… நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார். கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, நீதானா அவன் படத்தில் நடித்து அறிமுகமானார்.
அட்டகத்தி திரைப்படம் தான் இவரை பிரபலமாக்கியது. அதன் பின்னர் வடசென்னை, காக்கா முட்டை, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் , தர்மதுரை உள்ளிட்ட திரைப்படங்கள் அவரது கெரியருக்கு மைல் கல்லாக அமைந்தது. சில நாட்களுக்கு முன்னர் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து சொப்பன சுந்தரி திரைப்படம் வெளியாகி தோல்வி அடைந்தது. கடைசியாக ஃபர்ஹானா என்ற படத்தில் நடித்து இஸ்லாமிய மக்களின் வெறுப்புக்கு ஆளாகினார்.
தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருமுன் ஐஸ்வர்யா ராஜேஷ் குறித்து இயக்குனர் வீரபாண்டியன் காட்டமாக பேசியிருக்கிறார். அதாவது “அவர்களும் இவர்களும்” என்ற படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷை சினிமாவில் அறிமுகப்படுத்தியதே நான் தான். அந்த சமயத்தில் மிகவும் கஷ்டப்பட்டு வாய்ப்பு கேட்டு வாங்கினார். சான்ஸ் கேட்டு வரும்போது ஆட்டோவுக்கு கூட காசு இல்லாமல் தான் வந்தார்.
குண்டாக இருந்த அவருக்கு சரியாக ஆட வராது, நடிக்க தெரியாது. இருந்தாலும் நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்தேன். ஆரம்பத்தில் பல மேடையில் என் பெயரை குறிப்பிட்டு நன்றி கூறி வந்த அவர் பின்னர் காலப்போக்கில் நன்றி மறந்துவிட்டார். இப்போதெல்லாம் ஓவர் Attitude காட்டி வருகிறார் என மனதில் பட்டதையெல்லாம் கூறி மோசமாக விமர்சித்துள்ளார். இவருக்கு மறைமுகமாக ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ்,
உண்மைத்தன்மை என்னவென்று தெரியாமல் ஒரு பக்க கதையை மட்டும் வைத்துக் கொண்டு ஒருவரை குற்றம் சாட்டுவது, வாழ்க்கையையும் உறவையும் அழித்துவிடும். ஒருவர் மீது குற்றச்சாட்டை சுமத்தும் முன் மொத்த சம்பவத்தையும் தெரிந்து வைத்து பேச வேண்டும் என எச்சரித்துள்ளார்.