வடிவேலு எதுக்கு சரிபட்டு வரமாட்டார்..? முதன்முறையாக ரகசியத்தை உடைத்த இயக்குனர் வெங்கடேஷ்..

Author: Udayachandran RadhaKrishnan
29 January 2023, 3:00 pm

1996ம் ஆண்டு நடிகர் சரத்குமார் சுகன்யா கூட்டணியில் தமிழில் உருவான மகாபிரபு என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அடியெடுத்து வைத்தவர் இயக்குனர் வெங்கடேஷ். இத்திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. பின்னர், செல்வா, நிலவே வா, பகவதி போன்ற விஜய் படங்களை இயக்கியிருக்கிறார்.

தொடர்ந்து நடிகர் சிம்புவின் தம், குத்து உள்ளிட்ட திரைப்படங்களையும் இயக்கி இருக்கிறார். படங்களை இயக்கியதை விட, அங்காடி தெரு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் வெங்கடேஷ். இவர் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் வாத்தியார். இப்படத்தில் நடிகர் வடிவேலு காமெடி ட்ராக், அதில் இடம்பெற்ற காமெடி வசனம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஒன்று.

அதில், நடிகர் வடிவேலுவை பார்த்த சிங்கமுத்து நீ அதற்கு சரிப்பட்டு வரமாட்ட என்று திட்டுவார். எதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்-ன்னு சொல்லிட்டு திட்டுயா.. என்று கெஞ்சுவார் வடிவேலு. அப்போது அங்கு வரும் சிங்கமுத்துவின் மனைவி இவன் எதுக்கு சரிப்பட்டு வர மாட்டான் என்று சொல்லுங்கள் என்று கூறுவார். அப்போது மனைவியின் காதில் மட்டும் என்ன விஷயம் என்று கிசு கிசுப்பார் சிங்கமுத்து. அதனைக் கேட்ட அவருடைய மனைவி.. ஆமா இவன் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டான் என்று கூறுவார். கடைசியாக நடிகர் வடிவேலுவின் அப்பாவாக நடித்திருந்த மனோபாலாவும், ஆமா.. சரி தான்.. என் பையன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன் என்று கூறுவார்.

இதனால் குழம்பிப் போன வடிவேலு எதற்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்ன்னு சொல்லுங்க.. என்று அழுதபடியே அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்வார். இந்நிலையில், இந்த படத்தின் இயக்குனர் வெங்கடேஷிடம் இந்த காட்சி குறித்து கேள்வி கேட்கப்பட்டது அப்படி எதற்கு தான் வடிவேலு சரிப்பட்டு வர மாட்டார் என்று நீங்களாவது கூறுங்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த காட்சி படமாக்கப்பட்டது குறித்து பேசிய இயக்குனர் வெங்கடேஷ்.. இந்த காட்சியை படமாக்கப்படும் பொழுது திடீரென எனக்கு ஒரு யோசனை தோன்றியது. எதற்கு அவர் சரிப்பட்டு வர மாட்டார் என்று சொல்லாமலே விட்டு விடலாம் என்று கூறினேன். இந்த விஷயத்தை வடிவேலு சாரிடமும் சொன்னேன். ஆனால் இது ஒர்க் அவுட் ஆகுமா..? என்று கேட்டார். அதை எல்லாம் ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள்.. சொல்லாமலே விட்டு விடலாமே.. என்று கூறினேன். சரி என்று அரைகுறை மனதோடு தான் நடிகர் வடிவேலு அந்த காட்சியை நடித்தார்.

ஆனால், கடைசியாக அந்த காட்சியின் முடிவில் எதுக்கு என்ன காரணம் என்று சொல்லாமல் அடிக்கிறாங்களே மனசு உறுத்துமே என்று கூறுவார். அந்த வசனம் ஸ்கிரிப்டிலேயே கிடையாது. ஸ்பாட்டிலேயே வடிவேலு கூறிய வசனம். அந்த வசனம் தான் அந்த ஒட்டுமொத்த காமெடி காட்சியையும் நிறைவடையை செய்தது என்று கூறினார். இதனை கேட்ட ரசிகர்கள் அவர் எதற்கு சரிப்பட்டு வர மாட்டார்.. என்று சொல்லாதீர்கள் அதுதான் அந்த காமெடியின் ஆயுளுக்கு ஆதாரம் என்று தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 2258

    19

    15