எல்லாம் போச்சே… அஜித் புகைப்படத்தை நீக்கிய விக்னேஷ் சிவன் : AK62 டிராப் குறித்து அவரே வெளியிட்ட அறிவிப்பு

Author: Babu Lakshmanan
4 February 2023, 9:46 am

போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 11ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் துணிவு. மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர், அமீர், பாவனி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரையிட்ட இடமெல்லாம் வசூல் மழை பொழிந்து வருகிறது. இப்படத்தை தொடர்ந்து, அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் AK62 திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது. படத்தின் பட்ஜெட் மட்டும் ரூ.190 கோடி எனவும் சொல்லப்பட்டது.

ajith- updatenews360.png r

இப்படத்தின் ஷூட்டிங் தொடங்க தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், அஜித் – விக்னேஷ் கூட்டணி இந்தப்படத்தை டிராப் செய்வதாக தகவல் வெளியாகியது.

இந்த நிலையில் தயாரிப்பு தரப்புக்கு இந்தப் படத்தின் கதை பிடிக்காததால் விக்னேஷ் சிவன் விலகியதாகவும், வேறு ஒரு இயக்குநர் அந்தப் படத்தை இயக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவி வந்தது. இந்நிலையில் தடம், தடையற தாக்க, மீகாமன், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி, அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.

இந்த தகவல் ஒருபுறம் பரவி வந்தாலும், விக்னேஷ் சிவன் தரப்பில் இருந்து எந்தவித மறுப்பு செய்தியும் வெளியாகாமல் இருந்தது.

இந்த நிலையில், ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும்படி தற்போது ஏகே 62 படத்தில் இருந்து தான் வெளியேறிய விஷயத்தை உறுதிப்படுத்தி உள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். இயக்குநர் விக்னேஷ் சிவன் தீவிர அஜித் ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஏகே 62 படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், நடிகர் அஜித்தின் புகைப்படத்தை ட்விட்டர் கவர் பிக்சராக வைத்திருந்தார்.

தற்போது அதிரடியாக அந்த போட்டோவை விக்னேஷ் சிவன் நீக்கிவிட்டு புதிய கவர் பிக்சரை வைத்துள்ளார். அதில், “Never Give up” என்கிற வாசகம் அடங்கிய மோடிவேஷனல் புகைப்படத்தை மாற்றி உள்ளார். மேலும், தான் இயக்கும் படங்களை பட்டியிட்டுள்ள அவர், AK62 என்பதற்கு பதிலாக WIKKI6 எனப் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் தான் ஏகே62 படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதை அவர் மறைமுகமாக அறிவித்துள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 607

    0

    0