நயன்தாரா எடுத்த முடிவால் மன ஏக்கத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன்..!

Author: Rajesh
26 March 2022, 11:24 am

தமிழ் திரையுலகில் நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் தான் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இவர்கள் இருவரும் சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிப்பில் காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடித்துள்ளனர்.
இதனிடையே, விக்னேஷ் சிவன், இயக்கவுள்ள நடிகர் அஜித்தின் 62வது படத்திலும் நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார்.

தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் பாலிவுட் படமான லயன் படத்திலும் நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா விசாரணை அதிகாரியாக நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் இப்படத்திற்காக ஏப்ரல் முதல் வாரம் நயன்தாரா மும்பை செல்ல இருக்கிறார். இதன் படப்பிடிப்பு ஃபிலிம் சிட்டி ஸ்டூடியோவில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் ஒரு படம் முடிந்த பிறகு வெளிநாடு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அங்கு எடுக்கும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார், அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும்.

தற்போது காத்துவாக்குல 2 காதல் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இருவரும் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளனர். ஆனால் திடீரென நயன்தாராவிற்கு படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டதால் இவர்களால் அந்த விடுமுறையை கொண்டாட முடியவில்லை என்ற வருத்தத்தில் விக்னேஷ் சிவன் உள்ளாராம். அதுமட்டுமல்லாமல் நயன்தாராவை பிரிந்த ஒரு வாரம் இருக்க வேண்டும் என்ற கவலையிலும் விக்னேஷ் சிவன் உள்ளாராம்.

  • Dragon Box Office Collection கதற..கதற..மின்னல் வேகத்தில் ‘டிராகன்’ வசூல்..!
  • Close menu