‘நான் இரண்டு பசங்களுக்கு அப்பான்னு என்னால நம்ப முடியல’ முதன் முறையாக மனம் திறந்த விக்கி…!

Author: Udayachandran RadhaKrishnan
17 December 2022, 5:45 pm

நானும் ரவுடி தான் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் ஏற்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து, இருவீட்டாரின் சம்மதத்தின் பெயரில் கடந்த ஜுன் 9ம் தேதி நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது.

NayanatharaVigneshShivan_Updatenews360

கடைசியாக இவர் இயக்கத்தில் வெளிவந்து இருந்த படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை அடுத்து விக்னேஷ் சிவன், அஜித்தை வைத்து ஏகே 62 படத்தை இயக்கவிருக்கிறார். இதற்கான அறிவிப்புகள் எல்லாம் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இந்த படத்தின் முதல் கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

NayanatharaVigneshShivan_Updatenews360

இப்படி ஒரு நிலையில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருந்தார்கள். வாடகை தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகளை விக்கி – நயன் தம்பதி பெற்றெடுத்தனர். சரியாக விதிமுறையை கடைபிடிக்கவில்லை என்று சர்ச்சை எழவே, தாங்கள் 2016ம் ஆண்டே பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், 2021ம் ஆண்டு வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றெடுக்கும் வேலையை தொடங்கியதாகவும் சாட்சிகளை விசாரணையில் சமர்ப்பித்தனர்.

NayanatharaVigneshShivan_Updatenews360

இந்நிலையில், தங்களது இரட்டை குழந்தைகள் குறித்து மனம் திறந்து ஊடகமொன்றுக்கு விக்னேஷ் சிவன் பேட்டி அளித்துள்ளார். அதில் இரண்டு மகன்களுக்கு தந்தை என்பதை இன்னும் தன்னால் நம்பவே முடியவில்லை என்றும் ஒரு தனி உலகத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தனது குழந்தைகளுடன் நீண்ட நேரம் செலவழிப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் தனது வாழ்வின் மிகப்பெரிய அதிர்ஷ்டங்களில் ஒன்றுதான் குழந்தைகள் என்றும், சமீபத்தில் நயன்தாராவின் பிறந்தநாள் வந்திருந்தது. அப்போது முதல் முறையாக நாங்கள் நான்கு பேர் கொண்ட குடும்பமாக இருந்தது மகிழ்ச்சி என்று கூறியிருக்கிறார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 625

    1

    0