AK62வில் இருந்து நீக்கிய அஜித்.. ஆனா பாசத்துல விக்னேஷ் சிவன் என்ன செய்தாருனு பாருங்க.. Viral Pic..!

Author: Rajesh
12 February 2023, 2:00 pm

தமிழ் திரையுலகில் டாப் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான திரைப்படம் துணிவு. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரையிட்ட இடமெல்லாம் வசூல் மழை பொழிந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் AK62 திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

Ajith Wikki - Updatenews360

இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது. படத்தின் பட்ஜெட் மட்டும் ரூ.190 கோடி எனவும் சொல்லப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில், அஜித் நடிக்க இருக்கும் AK62 படத்தின் கதை தயாரிப்பு நிறுவனத்திற்கு பிடிக்காத காரணத்தினால் இப்படத்தை இயக்குவதில் இருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகுவதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாவிட்டாலும், விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பயோவில் இருந்து AK62 பெயரை நீக்கி தான் அப்படத்தில் இருந்து விலகியதை சூசகமாக அறிவித்தார். மேலும், இப்படத்தை மகிழ் திருமேனி மற்றும் பி.எஸ். மித்ரன் இணைந்து இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. AK62-வில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும், அஜித் மீதான அன்பை இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளிப்படுத்தி உள்ளது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

அதன்படி நடிகர் அஜித் கியூட்டாக சிரித்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா ஸ்டோரியாக பதிவிட்டு ஹார்டின் எமோஷியை போட்டு பதிவிட்டுள்ளார் விக்கி. இயக்குனர் விக்னேஷ் சிவன், அஜித்தின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிவர். படத்தின் இருந்து நீக்கிய பின்பும் ஒரு ரசிகனாக அஜித் மீது அவர் அதீத அன்பு செலுத்தி உள்ளதைப் பார்த்து ரசிகர்கள் நெகிழ்ந்து போய் உள்ளனர்.

  • Mammootty replaced in Baasha Movieரஜினியுடன் மம்முட்டி நடிக்க வேண்டிய இன்னொரு படம்.. பறிபோன வாய்ப்பு!
  • Views: - 585

    20

    0