AK62வில் இருந்து விலகும் விக்னேஷ் சிவன்: ஆறுதல் வீடியோ பகிர்ந்த ரசிகர் வைரலாகும் விக்கி Reaction..!

Author: Rajesh
2 February 2023, 10:59 am

தமிழ் திரையுலகில் டாப் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான திரைப்படம் துணிவு. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரையிட்ட இடமெல்லாம் வசூல் மழை பொழிந்து வருகிறது.

ajith - updatenews360 3

இதனைத் தொடர்ந்து, அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் AK62 திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாகவும், அப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது.இப்படிப்பட்ட நிலையில், அஜித் நடிக்க இருக்கும் AK62 படத்தின் கதை தயாரிப்பு நிறுவனத்திற்கு பிடிக்காத காரணத்தினால் இப்படத்தை இயக்குவதில் இருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகுவதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும், இப்படத்தை விக்னேஷ் சிவனிற்கு பதிலாக விஷ்னுவர்தான், மகிழ் திருமேனி அல்லது யாரேனும் பெரிய இயக்குனர் இயக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த தகவல் சோசியல் மீடியாவில் பரவி, ட்விட்டர் தளங்களில் ஹாஷ்டேக் ட்ரெண்டாகி வந்தது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், விக்னேஷ் சிவனிடம் இருந்து படம் கைநழுவி போனதற்கு ரசிகர் ஒருவர் “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தின் ஒரு காட்சியை ஆறுதலுக்காக பகிர்ந்து படத்தின் இருப்பது நீங்கள்தான் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த பதிவை இயக்குனர் விக்னேஷ் சிவனும் லைக் செய்துள்ளார். இதனால் விக்னேஷ் சிவன் AK62வில் இருந்து முழுவதுமாக விலகுவதை அவரே உறுதிபடுத்தி உள்ளாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…