தவறான சிகிச்சை.. 5 வருடமாக படுத்த படுக்கையாக இருக்கும் பிரபல இயக்குனரின் மனைவி..!

Author: Vignesh
27 October 2023, 7:21 pm

குடும்பங்கள் கொண்டாடும் பீல் குட் படங்களை இயக்கி தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியவர் இயக்குனர் விக்ரமன். புதிய பாதை என்ற படத்தில் பார்த்திபனுக்கு உதவ இயக்குனராக இருந்து பின் புதுவசந்தம் என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.

இவரின் முதல் படமே தமிழக அரசின் சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த படத்திற்கான விருதை பெற்றது. இவர் கடைசியாக 2014 ஆம் ஆண்டு வெளியான நினைத்தது யாரோ என்கிற படத்தை தான் இயக்கியுள்ளார். அதன் பிறகு இவர் படமே இயக்கவில்லை.

director vikraman

முன்னதாக, இயக்குனர் விக்ரமின் மனைவி ஜெயப்பிரியா ஒரு குச்சிப்புடி நடன கலைஞராக சுமார் 4000 மேடைகளில் ஆடியவர். உடலில் ஏற்பட்ட பிரச்சனைக்காக சிகிச்சை மேற்கொண்ட போது, சிகிச்சை தவறாக போக அதன் காரணமாக சுமார் ஐந்து வருடங்களாக படுத்த படுக்கையாக இருந்த இவருக்கு, தற்போது கிட்னி பிரச்சனையும் ஏற்பட்டுள்ளதாம். மனைவியை கூட இருந்து பார்த்துக்கொள்ளவே படங்கள் ஏதும் இயக்குனர் விக்ரமும் இயக்க வில்லையாம். தற்போது தன் மனைவியின் சிகிச்சைக்கு உதவுமாறு தமிழ் நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினிடம் கும்பிட்டு உதவி கேட்டு பேட்டிக் கொடுத்திருக்கிறார்.

director vikraman
  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?