ரஜினி மட்டும் தான் நடிகரா?.. நாங்க என்ன சொம்பையா?.. நடிகை விஷயத்தில் கடுப்பான இயக்குனர்..!
Author: Vignesh2 July 2023, 10:00 am
தமிழ் சினிமாவில் குடும்ப பாங்கான கதைகளை கொண்ட படங்களை இயக்கியவர் விசு. இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்னர் நாடகங்களை இயக்கிக் கொண்டு இருந்தார். பல நாடகங்களை இயக்கிய விசு இயக்குனர் சிகரம் பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பின்னர் இயக்குனராக மாறியவர்.
இவரது படங்களில் சம்சாரம் அது மின்சாரம், திருமதி ஒரு வெகுமதி, மணல் கயிறு, டௌரி கல்யாணம், உள்ளிட்ட பல படங்கள் குறிப்பிடத்தக்கவை. பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தும் அதோடு பல படங்களுக்கு கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும், வேலை செய்தவர் விசு. அதோடு தொலைக்காட்சியில் அரட்டை அரங்கம் என்னும் நிகழ்ச்சியை நடத்தி சாமானிய மக்களிடம் பிரபலமடைந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேட்டி அளித்த விசுவின் நண்பரான டெல்லி கணேஷ் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் தான் டெல்லியில் சில நாடகங்களில் நடித்துவிட்டு பின்னர் சென்னை வந்ததாகவும், விசுவின் நாடகத்தில் தான் முதலில் நடித்ததாகவும், தன்னுடைய நடிப்பு விசுவுக்கு மிகவும் பிடித்து போனதாகவும், அடுத்து அவர் இயக்கிய பட்டினப்பிரவேசம் என்கிற நாடகத்திலும் தான் நடித்ததாகவும், இதை பார்த்து தான் இயக்குனர் பாலச்சந்தர் தனக்கும் வாய்ப்பு கொடுத்தார் என்று தெரிவித்திருந்தார்.
அதன் மூலமாக தான் சினிமாவில் நுழைந்ததாகவும், விசுவுக்கு கோபம் அதிகமாக வரும் என்றும், பாலச்சந்தரிடம் தயாரிப்பாளர் நடராஜன் வேலை செய்து கொண்டிருந்தபோது விசுவின் படத்தில் நடித்து வந்த நடிகை ரஜினி படம் ஒன்றில் நடிப்பதற்காக மும்பை அனுப்பிவிட்டாராம்.
இதனால் கோபம் அடைந்த விசு அன்றைய படப்பிடிப்பை கேன்சல் செய்து நடராஜனிடம் என்னை கேட்காமல் என் படத்தில் நடிக்கும் நடிகையை நீங்கள் எவ்வாறு வேறுபடத்திற்கு அனுப்பலாம் ரஜினி மட்டும்தான் நடிகரா நாங்க எல்லாம் என்ன சொம்பையா? சினிமாவில் இல்லையா? என மிகவும் கோபமாக பேசிவிட்டாராம். அதன் பிறகு, விசுவை சமாதானப்படுத்த பாலச்சந்தர் முயற்சி செய்தார் ஆனால் முடியவில்லையாம். அவர் அவ்வளவு கோபக்காரர் என டெல்லி கணேஷ் பேட்டியில் தெரிவித்துள்ளார்.