பச்சை துரோகி… என் எதிரிக்கு கைக்கூலி : பிரபல நடிகரை விளாசிய இயக்குநர்!
Author: Udayachandran RadhaKrishnan7 November 2024, 11:49 am
எனக்கு பட வாய்ப்பு கிடைக்காம பண்ணிட்டான் அந்த நடிகன்.. அவன் ஒரு பச்சை துரோகி என இயக்கநர் பதிவிட்டுள்ளது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.
2013ஆம் ஆண்டு விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மத யானைக் கூட்டம். இந்த படத்தில் கதிர் நாயகனாக அறிமுகமாகினார்.
ஓவியா, விஜி சந்திரசேகர், வேல ராமமூர்த்தி, கலையரசன் உட்பட பலர் நடித்திருந்தனர். 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படம் சுமார் 15 கோடி வரை வசூல் செய்து வெற்றிப்படமாக அமைந்தது.
இதையும் படியுங்க: திருமணமான 3 வருடத்தில் விவாகரத்து.. நிறைமாத கர்ப்பிணியான சீரியல் நடிகை!
கோனக்கொண்டக்காரி என்ற பாடல் பட்டிதெட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. இந்த பாடலை ஜிவி பிரகாஷ் பாட, என்.ஆர்.ரகுநாதன் இசையமைத்திருந்தார்.
இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன், அதற்கு பிறகு படமே இயக்கவில்லை. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு ராவண கூட்டம் படத்தை இயக்கினார்.
இது குறித்து தற்போது அவர் முகநூலில் பதிவிட்டுள்ளது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. அதில், மதயானைக் கூட்டம் படத்திற்கு பிறகு எனக்கு வாய்ப்பு வரவில்லை, நானும் யாரும் அழைக்கவில்லை என்று தான் நினைத்தேன்,ஆனால் வந்த வாயப்புகளை எல்லாம் ஒருவன் தடுத்திருக்கிறான் என்பதை இன்றுதான் தெரிந்து கொண்டேன்.
அவன் வேறு யாருமல்ல, அவனை நான் தான் நடிகனாக்கினேன், பச்சை துரோகி.. என் எதிரிக்கு கைக்கூலியாக செயல்பட்டிருக்கிறான். இதைக் கேட்டதில் இருந்து ஆண்டவன் மீதுதான் ஆத்திரம் வருகிறது. ஆத்திரப்பட்டு ஒன்றும் ஆகப்போவது இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
இதைப் பார்த்த நெட்டிசன்கள், அந்த நடிகர் யார் என்ற விவாதத்தை எழுப்பி வருகின்றனர். வேறு யாருமில்லை, அந்த படத்தின் ஹீரோ கதிர்தான் என்பதால் அவரைதான் இயக்குநர் சாடியுள்ளதாக கூறி வருகின்றனர்.