ரசிகர்களுக்காக ரிலீசுக்கு பின் ரஜினி, சூர்யா மற்றும் அஜித் படங்களின் Climax’ஐ மாற்றிய இயக்குனர்கள்..!

Author: Udayachandran RadhaKrishnan
15 January 2023, 4:00 pm

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் படங்களில் கிளைமேக்ஸ் காட்சிகள் ரசிகர்களுக்கு ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இல்லாத நிலையில், அப்படத்தின் வெற்றி வாய்ப்பே மாறிப்போகும் நிலைக்கு கொண்டு செல்லும். இதனால், கிளைமேக்ஸ் காட்சிகளை இயக்குனர்கள் வைத்து அதன்பின் அதற்கு ஏற்றார் போல மாற்றியமைத்து விடுவார்கள். அப்படி கமல், சூர்யா, அஜித், ரஜினி போன்ற உச்ச நடிகர்களின் பிரபல வெற்றி படங்களாக அவர்கள் கேரியரில் அமைந்த படங்களில் கிளைமேக்ஸ் காட்சிகள் மாற்றப்பட்டது குறித்த விவரம் மற்றும் லிஸ்ட் இதோ..

எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா நடிப்பில் வெளியான திரைப்படம் நல்லவனுக்கு நல்லவன். இப்படத்தின் கிளைமேக்ஸில், ரஜினி இறந்துவிடுவது போன்ற காட்சிகள் அமைத்துவிட்டு, அதன்பின் ரசிகர்களுக்கு இது திருப்தி அளிக்காது என கிளைமேக்ஸ் காட்சியை மாற்றியுள்ளார் இயக்குனர்.

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான பிரபல ஹிட் திரைப்படங்கள் காக்க காக்க மற்றும் வேட்டையாடு விளையாடு. இந்த இருபடங்களிலும் நடிகை ஜோதிகா, கமல், சூர்யா ஜோடியாக நடித்திருப்பார். கதை படி இந்த இரு படங்களிலும் ஜோதிகா இறப்பது போன்ற கிளைமேக்ஸ் காட்சிகள் அமைக்கப்பட்டு பின் உயிருடன் ஜோதிகா இருப்பது போன்று இருக்கும். இப்படி இரு படங்களிலும் ஜோதிகாவை இறப்பது போல காட்டி, பின்னர் ரசிகர் இதனை விரும்பமாட்டார்கள் என அவரை பிழைப்பது போல காட்டியிருப்பார் கெளதம் மேனன்.

அஜித், ஜோதிகா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் முகவரி. இப்படத்தின் இறுதியில், ஜோதிகாவை விட்டுவிட்டு அஜித் தன் குடும்பத்திற்காக வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்வது போல் காட்சியமைக்கப்பட்டு அதன்பின், ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று ரிலீசுக்கு பின் கிளைமேக்ஸ் காட்சியை மாற்றியிருந்தனர். அதேபோல் அஜித்தின் கிரீடம் படத்தில் போலீஸ் ஆகமுடியாமல் போவது போல் அமைத்து அதன்பின் ரிலீசான ஒரு வாரம் கழித்து கிளைமேக்ஸ் காட்சியை மாற்றியது குறிப்பிடத்தக்கது.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…
  • Close menu