கங்குவா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் புதுமுக நடிகை திஷா பதானி.

தமிழுக்கு இவர் புதுமுகம் என்றாலும் பாலிவுட் படங்களில் 2015 ஆம் ஆண்டு லோபர் என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார்.
2016 ஆம் ஆண்டில் தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான எம்.எஸ்.தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற திரைப் படத்தில் பாலிவுட்டில் அறிமுகமானார். 2017 ஆம் ஆண்டில் சீன அதிரடி நகைச்சுவை திரைப்படமான குங்ஃபூ யோகாவில் நடித்தார். இது அதிக வசூல் செய்த சீன திரைப்படங்களில் ஒன்று. வணிகரீதியாக வெற்றி பெற்ற பாலிவுட் அதிரடித் திரைப் படங்களான பாகி 2 மற்றும் பாரத் ஆகிய படங்களில் நடித்தார்.
இவரும் தெலுங்கு திரையுலகில் பாகுபலி திரைப்படத்தின் மூலம் முன்னணி ஹீரோவாக மாறிப் போன பிரபாசும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.
சமீபத்தில் திஷா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்தார். இதில் அவரது கையில் PD என பச்சை குத்தப் பட்டிருந்தது. இதற்கு அர்த்தம் பிரபாஸ் திஷா பதானி என்று திரை வட்டாரத்தில் சிலர் சொல்லி வருகின்றனர்.