போஸ் கொடுத்தது போதும் ஐடி கார்டு காட்டு… மும்பை Airport’ல் சூர்யா பட ஹீரோயினை திணறவிட்ட போலீஸ் – வைரல் வீடியோ!
Author: Shree14 October 2023, 7:27 pm
‘லோஃபர்’ என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் தான் நடிகை திஷா பட்டானி. இதனைத் தொடர்ந்து, கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் “M.S. Dhoni: The Untold Story” என்ற படத்தில் நடித்தன் மூலம் இந்தியா முழுவதும் பேசப்பட்டார்.
இப்படத்தில், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங், தோனி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில், முன்னாள் காதலியாக திஷா நடித்திருந்தார். இப்பட வெற்றியைத் தொடர்ந்து, ஜாக்கிசானுடன் குங் ஃபூ யோகா படத்தில் நடித்தார். உள்ளூர் ரசிகர்கள் முதல் உலக சினிமா ரசிகர்கள் வரை கவர்ந்தார்.
தொடர்ந்து இந்தியில் பல முன்னை நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த திஷா பதானி தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ” கங்குவா ” படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகம் ஆகவுள்ளார். இரு வேறு காலகட்டங்களில், வரலாற்றுப் பின்னணியில் கொண்ட கதையாக உருவாகி வரும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.
பான் இந்தியா படமாக 10 மொழிகளில் உருவாகி வரும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் கதாநாயாகி திஷா பதானி சமீபத்தில் மும்பை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு வழக்கம்போலவே மீடியாக்கள் அவரை படம்பிடித்துள்ளது. போஸ் கொடுத்துக்கொண்டே கெத்தா உள்ளே என்ட்ரி கொடுத்த திஷா பதானியை மடக்கி பிடித்த காவலர் அவரிடம் ஐடி கார்டு காட்டசொல்ல பதற்றத்துடன் படபடவென தேட ஆரம்பித்தார். எடுத்து காட்டிய பின்னரே அவர் உள்ளே அனுமதிக்கப்பட்டார். நடிகையை பார்த்ததும் வாய்பிளக்காமல் தன் கடமையை கண்ணியத்துடன் செய்த அந்த காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ: