அய்யோ.. அம்மா.. ஆடியோ லாஞ்ச்…’வாரிசு’ ஆடியோ லாஞ்சுக்கு போன விஜய் ரசிகர்கள் விரட்டியடிப்பு : ட்விட்டரில் கடும் எதிர்ப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
24 December 2022, 6:10 pm

நேரு விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமான முறையில் நடைபெறும் இந்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக போலீஸ் பாதுகாப்பு தந்துள்ளனர்.

இதில் நேரு விளையாட்டு அரங்கத்தின் நுழைவாயிலில் ரசிகர்கள் பலருக்கும் குவிந்திருந்தனர். அதன் வீடியோ கூட சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், நுழைவாயிலில் இருந்த சில காவல் துறை அதிகாரிகளை விஜய் ரசிகர்கள் தாக்கியுள்ளதாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. கூட்ட நெரிசலில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு தான் இதற்க்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இருப்பினும் போலீஸ் மீது ரசிகர்கள் இப்படி நடந்துகொண்டு தவறு என்று கூறி கண்டித்து பலரும் சமூக வலைத்தளத்தில் கூறி வருகிறார்கள்.

வாரிசு ஆடியோ வெளியீடு இன்று நடைபெறும் என அறிவித்தது முதலே விஜய் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். மேலும் ட்விட்டரில் #என்நெஞ்சில்குடிஇருக்கும் என்ற ஹேஷ்டேக்கை தெறிக்கவிட்டனர்.

இந்த நிலையில் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு டிக்கெட் எடுத்தும் உள்ளே அனுமதி கொடுக்காத நிலையில் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து அஜித் ரசிகர்கள், விஜய் ரசிகர்கள் மீது தடியடி நடத்துவதை விமர்சிக்கும் விதமாக #அய்யோஅம்மாஆடியோலாஞ்ச் என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!