பெரும் விபத்தில் சிக்கிய நடிகர் விஜய் ஆண்டனியின் தற்போதைய நிலை: புகைப்படத்துடன் அவரே போட்ட பதிவு..!

Author: Vignesh
25 January 2023, 4:15 pm

பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஸ்கூட்டர் போட் ஓட்டும் ஸ்டண்ட் காட்சி ஒன்றில் ரிக்ஸ் எடுத்து நடித்தாராம் விஜய் ஆண்டனி. இந்த சமயத்தில் தான் விஜய் ஆண்டனிக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஸ்கூட்டர் போட்டில் இருந்து தவறி தண்ணீரில் விழுந்துள்ளார். விஜய் ஆண்டனிக்கு நீச்சல் தெரியாத காரணத்தினால் அவர் தண்ணீருக்குள் மூழ்கியுள்ளார்.

தண்ணீரில் இருந்து வெளியே வந்த விஜய் ஆண்டனி மூச்சு விடவே கஷ்ப்பட்டாராம். இதன்பின் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று ICUவில் அனுமதித்துள்ளனர்.

முகத்தில் காயம் ஏற்பட்டுள்ள விஜய் ஆண்டனி தற்போது சிகிச்சைக்கு பின் நன்றாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அவருக்கு தாடை மற்றும் மூக்கில் பயங்கர காயம் ஏற்பட்டது. இதனால் அவர் சென்னைக்கு வரவழைக்கப்பட்டார்.

vijay antony - updatenews360

பிரபல மருத்துவமனையில் அவருக்கு தாடை மற்றும் மூக்கில் காயம் ஏற்பட்டதால் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு தான் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் உங்களை சந்திக்கிறேன் என விஜய் ஆண்டனி மருத்துவமனையில் இருந்து புகைப்படத்துடன் டுவிட் செய்துள்ளது தற்போது வைரலாகி வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 540

    0

    0