மொக்க படத்தை வாங்க முன்வராத விநியோகிஸ்தர்கள்… பேராபத்தில் வந்து உதவிய ரஜினி – நன்றிகெட்ட தனுஷ்!

Author: Shree
15 June 2023, 9:04 pm

சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகரான தனுஷ் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்துக்கொண்டு இரண்டு பிள்ளைகளை பெற்றார். தனுஷுக்கு திருமணம் ஆன அந்த சமயத்தில் அவர் அப்படி ஒன்றும் பெரிய ஹீரோவாக இல்லை. இருந்தாலும் ரஜினி அவர் மீது பெரிய நம்பிக்கை வைத்து மகளை கட்டிக்கொடுத்தார்.

அதன் பின்னர் தொடர்ந்து தனுஷுக்கு தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து அவரை டாப் ஹீரோ என்ற அந்தஸ்திற்கு உயர்த்தினார் ரஜினி. கிட்டத்தட்ட அவரது மொத்த வெற்றிக்கும் பின்னர் ரஜினி தான் இருந்தாராம். என்ன தான் திறமை இருந்தாலும் சினிமா துறையை பொறுத்தவரை யாரேனும் மிகப்பெரிய ஆள் பலம் இருக்கவேண்டும். அப்படி இருந்தால் தான் எந்த தொல்லைகளும், தொந்தரவும் இல்லாமல் முன்னேற முடியும்.

அப்படித்தான் தனுஷின் தேவதை கண்டேன் படத்தை வாங்க எந்த ஒரு விநியோகிஸ்தர்களும் முன்வரவில்லை. அந்த படத்தை பார்த்து இது மொக்கையாக இருக்கிறது என கூறிவிட்டு நழுவினார்களாம். அந்த சமயத்தில் தனுஷ் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி ரஜினியிடம் சென்று உதவி கேட்டாராம். உடனே ரஜினி விநியோகிஸ்தரக்ளை வீட்டிற்கு அழைத்து அவர் படத்தை நல்ல விலைக்கு வாங்கிக்கொண்டு என்னுடைய அடுத்த படத்தின் சான்ஸ் தருகிறேன் என கூற உடனே விநோயோகிஸ்தர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு வாங்கினார்களாம். அன்று ரஜினி இல்லையென்றால் தனுஷ் அடையாளம் தெரியாமல் போயிருப்பார். ஆனால் இப்போ எல்லா நன்றியையும் மறந்துவிட்டார் என பிரபால பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 788

    5

    1