4,5 முறை கால் செய்தும் எடுக்கவில்லை.. விஜய் பழசை மறந்துட்டார் : புலம்பிய பிரபலம்..!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். கடந்த சில வருடங்களாகவே அரசியலில் நுழைவார் என்ற பேச்சு அடிப்பட்ட போது அவர் இதை மறுக்கவில்லை. விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை ஆரம்பித்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு அவர் தனது ரசிகர்கள் மூலம் செய்து வந்தார்.

இதையடுத்து, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது கட்சி பெயரை பதிவு செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக வெற்றி கழகம் சார்பில் விஜய் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பும் தமிழ்நாட்டில் எகிறி வருகிறது. நாகை, தூத்துக்குடி உள்ளிட்ட 5 சட்டமன்ற தொகுதிகளின் லிஸ்ட் விஜய் மேஜையில் இருப்பதாகவும் சாதக, பாதகங்களை ஆராய்ந்து அவர் களமிறங்குவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

விஜய் இன்னும் நாட்களை கழிக்காமல் சூட்டோடு சூடாக உடனே இப்போதே அரசியலுக்கு வர வேண்டும் என அவரது நலன் விரும்பியாக அறியப்படும் பழ.கருப்பையா வலியுறுத்தி வருவது கவனிக்கத்தக்கது. இதனால், எப்படி பார்த்தாலும் இன்னும் 6 மாதங்களில் விஜய்கள் அரசியலுக்கு வந்துவிடுவார். மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், தமிழக வெற்றி கழகம் சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள். இப்போதே அவரவர் பகுதிகளில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க ஆரம்பித்துள்ளனர். இதனால், நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த கையோடு விஜயின் வருகையால் தமிழக அரசியல் களம் அனல் பறக்கும் எனத் தெரிகிறது.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஷாஜகான் படத்தில் இரண்டாம் கதாநாயகனாக நடித்த நடிகர் தேவகரன் கிருஷ்ணா விஜய் குறித்த சில தகவல்களை பேசி உள்ளார். அதில், நான்கு வருடத்திற்கு முன்பு ஷூட்டிங் பக்கத்தில் விஜய் இருந்ததை தெரிந்து அவருடன் பேச நினைத்தேன். என்னுடைய மேனேஜருக்கு விஜயின் மேனேஜரின் நம்பர் தெரிந்து whatsapp செய்தேன். அப்போது கால் செய்த போது என்னை அறிமுகப்படுத்தி ஷாஜகான் படத்தில் நடித்தேன் என்று கூறி ஐந்து நிமிடம் பேச வேண்டும் என்று கூறினேன்.

4, ஐந்து முறை கால் செய்து எடுக்கவில்லை. அதன் பின் எடுத்துவிட்டு என்னிடம் விஜய் மேனேஜர் அவரைப் பார்க்க எல்லாம் முடியாது அவர் ஷாஜகான் விஜய் கிடையாது பெரிய ஆளாகி விட்டார் என்று கூறினார். அதனால், நான் கஷ்டப்பட்டேன் அவர் எதற்கு அப்படி பண்ணனும் நான் அவரிடம் காசு வாங்கவா போறேன். நான் வெளி நபர் கிடையாது அவருடன் நடித்த நடிகர் இரண்டு நிமிடம் பேச கேட்டேன் முடியாது என்று சொல்லிவிட்டார். அப்படி விஜயை பார்க்கிறதே பெரிய விஷயம். இதன்பின், அவருடன் பேச வாய்ப்பு கிடைக்காது. அப்படி கிடைத்தால், கடவுளிடம் இருக்கிறது அது கஷ்டம் கிடையாது. ஒருவரின் வாழ்க்கையின் மாற்றம் தான் என்று நடிகர் தேவகரன் கிருஷ்ணா வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

அடுக்கடுக்காய் விழுந்த விக்கெட்…மிரட்டி விட்ட இந்திய பௌலர்கள்…!

திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…

7 hours ago

நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!

தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…

8 hours ago

கோபத்தில் நடிகர் உன்னிமுகுந் எடுத்த முடிவு…தீயாய் பரவும் வீடியோ..!

ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…

9 hours ago

டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!

வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…

10 hours ago

சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!

விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…

11 hours ago

IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…

12 hours ago

This website uses cookies.