சும்மா இருந்த மீடியாவை சொறிஞ்சு விட்ட ஐஸ்வர்யா ராய்… மீண்டும் வெடிக்கும் விவாகரத்து சர்ச்சை..!
Author: Vignesh13 ஜூலை 2024, 3:03 மணி
இந்திய சினிமாவின் முன்னணி நடிகையும் உலக சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராகவும் பார்க்கப்படுபவர் நடிகை ஐஸ்வர்யா ராய். உலக அழகி என பலரும் பட்டம் பெற்றாலும் இன்றும் ‘உலக அழகி’ என சொன்னால் முதலில் நமது நியாபகத்துக்கு வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராய் தான்.
மேலும் படிக்க: பல பேருடன் தொடர்பு.. அதிக பண தேவை இருந்துச்சு; எமோஷனலாக பேசிய ரேஷ்மா பசுப்புலேட்டி..!
குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களுக்கு எவ்வளவோ நல்ல பேவரைட் ஹீரோயின்ஸ் இருந்தாலும், கனவு கன்னியாக இன்னும் மனதில் நிலைத்திருப்பவர் ஐஸ்வர்யா ராய். ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில், இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ், குரு, எந்திரன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் படிக்க: ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க.. ப்ளூ சட்டையால் நொந்து போன விஜய் ஆண்டனியின் பதிவு..!
இவர் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரானா அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து 2007ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராதியா பச்சன் என்ற மகளும் உள்ளார். இந்நிலையில், தற்போது சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய் மோதிரம் இல்லாமல் வந்துள்ளார். இதனால், ஐஸ்வர்யா ராய்க்கும் அபிஷேக் பச்சனும் சண்டை அதனால் இருவரும் பிரியப்போகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்து விவாகரத்து சர்ச்சை கிளம்பியது. தற்போது, மும்பையில், நடைபெற்ற முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் திருமண நிகழ்ச்சிக்கு பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, திருமணத்திற்கு, அபிஷேக் பச்சன் தன் குடும்பத்தினருடன் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், நடிகை ஐஸ்வர்யா ராய் தன் மகளுடன் தனியாக சென்றுள்ளார். கணவர் குடும்பத்துடன் ஐஸ்வர்யா ராய் வராமல் தனியாக வந்தது தான். இப்போது, பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. இதனால், இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்று கூறியது எல்லாம் உண்மை தானோ என்று பாலிவுட் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
0
0