விவாகரத்து விவகாரம் வதந்தி இல்லையா? முதன்முறையாக அதிரடி விளக்கம் அளித்த நடிகை சினேகா!!

Author: Udayachandran RadhaKrishnan
27 December 2022, 2:05 pm

நடிகை சினேகாவுக்கும் நடிகர் பிரசன்னாவுக்கு 2012-ம் வருடம் திருமணமானது. இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளன.

புன்னகை இளவரசி என்று செல்லமாக அழைக்கப்பட்ட சினேகாவை, அந்த சமயத்தில் அவ்வளவாக பிரபலம் இல்லாத நடிகர் பிரசன்ன திருமணம் செய்துகொண்டார் என்ற செய்தி எல்லோருக்கும் ஷாக்காக இருந்தது.

ஆனால், அவர்கள் பல வருடங்களாக காதலித்து அதன் பின்னர் தான் திருமணம் செய்துகொண்டனர் என்ற தகவல் அந்த சமயத்தில் வந்தது. 10 வருடங்கள் சென்ற நிலையில் இருவருமே சினிமா துறையில் பணியாற்றிக்கொண்டு தான் இருக்கின்றனர்.

தற்போதெல்லாம் சினேகா சில படங்களில் கௌரவ தோற்றத்தில் நடித்துக்கொண்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் பிரபல சேனல்களில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஜட்ஜ் ஆகவும் பணிபுரிந்து வருகிறார்.


அதேபோல் நடிகர் பிரசன்னாவும் பல படங்களில் தற்போது வரையிலும் நடித்துக்கொண்டு தான் இருக்கிறார். சமீபத்தில் இவர்களுக்கு இரண்டாவது குழந்தை பிறந்து, அதற்கான வளைகாப்பில் கூட பல்வேரு முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இது ஒரு புறம் இருக்க, சமீப காலமாகவே சினேகா பிரசன்னா தம்பதியை பற்றி ஒரு செய்தி உலவிக்கொண்டே இருக்கின்றது. அது என்னெவென்றால், இவர்கள் இருவருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் விவாகரத்து நடக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த விஷத்தை பற்றி சினேகாவும், பிரசன்னாவும் இவ்வளவு நாட்கள் பேசாமல் இருந்தன. தற்போது தான் இதற்கெல்லாம் முடிவு காட்டும் வகையில், நடிகை சினேகா தனது சமூக வளைத்தல பக்கங்களில், அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் போட்டோவை பதிவேற்றியுள்ளார்.

அதாவது நாங்கள் சந்தோசமாக தான் இருக்கிறோம், என்னை இவர் விரும்பி காதலித்தார், நானும் அப்படிதான் இருக்கிறேன் என்று பதிவேற்றியுள்ளார்.

மேலும் சினேகா, பிரச்சன்னாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

  • srinidhi shetty not able to act in ramayana movie because of yash பிரம்மாண்ட படத்தில் நடிக்க முடியாதபடி பண்ணிட்டாங்க? பிரபல ஹீரோவை கைகாட்டும் ஸ்ரீநிதி ஷெட்டி…