சங்கீதாவுடன் விவாகரத்து.. நடிகையுடன் இரண்டாம் திருமணம்.. வதந்திகளுக்கு மறைமுகமாக பதில் கூறிய விஜய்..!
Author: Rajesh18 June 2023, 12:05 pm
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் “தளபதி” என்று ரசிகர்களால் அழைக்கப்படும் முன்னணி நடிகராக சிறந்து விளங்கி வருகிறார். 1992ல் நாளைய தீர்ப்பு என்னும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விஜய்.

முதல் படத்தில் நிறைய விமர்சனங்களை எதிர் கொண்டாலும் தொடர்ந்து முயற்சியை கைவிடாமல் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இவர் தந்தை இயக்கத்தில் நடித்து, அதன் பின்னர் பல முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து தனக்கென சினிமாவில் இடம் பிடித்தார். தற்போது இவர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் விஜய் விரைவில் அரசியலிலும் இறங்க உள்ளார் என சொல்லப்படுகிறது. நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்களை ஒன்றிணைக்கும் விதமாகவும், நலத்திட்ட உதவிகள் செய்வதில் ஈடுபடும் விதமாகவும் விஜய் மக்கள் இயக்கத்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத் தொகை நேற்று வழங்கினார். சென்னை நீலாங்கரை ஆர்.கே.கன்வென்ஷன் நடைபெற்ற இந்த விழாவில் சுமார் 1,500 மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.
இந்த விழா மேடையில் பல விஷயங்களை பகிர்ந்துகொண்ட விஜய், “சமூக வலைத்தளத்தில் வரும் 75% சதவீதம் செய்திகள் பொய்யானதாக இருக்கிறது. நான் எல்லாரையும் சொல்லல, ஒரு சிலர் போலி விஷயங்களை கவர்ச்சிக்காக மக்களை ஈர்க்க வெளியிட்டு வருகின்றனர்” என பேசினார்.
சங்கீதாவுடன் விவாகரத்து, நடிகையுடன் இரண்டாம் திருமணம், பெற்றோரை மதிக்காமல் இருக்கும் விஜய் என பல வதந்திகளுக்கு இந்த பதில் மூலம் மறைமுகமாக விஜய் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.