கசந்து போன திருமண வாழ்க்கை.. விவாகரத்து அறிவித்த பிக் பாஸ் பிரபலம் : அதிர்ந்து போன ரசிகர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 May 2023, 3:34 pm

6 வருட வாழ்க்கை.. விவாகரத்து அறிவித்த பிக் பாஸ் பிரபலம் : அதிர்ந்து போன ரசிகர்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் ஆர்.ஜே. வைஷ்ணவி.இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருந்தது.பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார் ஆர்.ஜே. வைஷ்ணவி. இவர் இதற்கு முன்பு ரேடியோ ஜாக்கியாக பணியாற்றி வந்துள்ளார்‌.

ஆர்.ஜே. வைஷ்ணவி சா.விஸ்வநாதனின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனது கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார்.

பின்னர் ஆர்.ஜே மீது உள்ள ஆர்வத்தால் ஆர்.ஜே வாக பணியாற்றி வந்தார். இதுமட்டுமல்ல் இவர் சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன் படத்தில் வைஷ்ணவி ஒரு சில காட்சிகளில் நடித்து இருப்பார்.

இவர் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது பள்ளியில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது அப்போது அவருக்கே தெரியாமல் வல்லவன் படத்திற்காக அந்த காட்சிகள் எடுக்கப்பட்டது.

இவர் தனது நீண்டகால நண்பரான அஞ்சன் என்பவரை காதலித்து வந்தார். பின்னர் 2016 ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். அஞ்சன் விமான பைலட் ஆக பணியாற்றி வருகிறார்.

இவர்கள் இருவரும் ஜாலியாக வாழ்ந்து வந்தனர். இவர்கள் இருவரும் சுமார் 6 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இவர்கள் தற்போது விவாகரத்து செய்வதாக சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளனர்.

அதில் வைஷ்ணவி நாங்கள் நண்பர்களாக தொடர்வோம். மோசமான விஷயம் எதுவும் நடைபெறவில்லை. ஆனால் நாங்கள் நண்பர்களாக இருப்பது தான் சரியாக இருக்கும் என இருவருமே முடிவெடுத்து உள்ளோம். நாங்கள் இருவரும் பிரிவதற்காக வருத்தப்படவில்லை.

சூழ்நிலை காரணமாக தான் விவாகரத்து செய்வதாக முடிவு எடுத்துள்ளோம். அவருக்கு என் மனதில் எப்போதும் ஒரு இடம் உண்டு என்று வைஷ்ணவி தனது பதிவில் கூறியிருந்தார்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?