பசங்களோட Latest Crush யாருனு கேட்டா இப்போ நம்ம திவ்யா பாரதினுதான் சொல்றாங்க. படங்கள் நடிக்கும் வரிசையை பொறுத்து விஜய் சேதுபதிக்கு போட்டியாக இருக்கிறார் நம்ம திவ்யா பாரதி. இவர் நடிப்பில் உருவாகி வெளியான பேச்சுலர்படம் சுமாரான வெற்றி பெற்றது.
இந்த படம் வெளியான சூழலில் பரபரப்பை கிளப்பியது. இப்படத்தில் ஹீரோயினாக நடித்த திவ்யபாரதியை ஏதோ வடநாட்டு பெண், பாலிவுட் நடிகை என்றெல்லாம் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் பக்காக கோயம்புத்தூர் பொண்ணு. 2015ம் ஆண்டு நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றவர்.
அதன் பிறகு மாடல் அழகியாக வலம் வந்து சில விளம்பர படங்களிலும் நடித்தார். இப்போது ஹீரோயின் ஆகிவிட்டார்.
இந்நிலையில், இவரின் உடல் அமைப்பு குறித்து கேலி கமெண்ட்களும் வரும். இந்நிலையில் திவ்ய பாரதி உருவக்கேலி குறித்து மனம் திறந்துள்ளார்.
அதில், சமீப நாட்களில், தனது உடல் வடிவம் போலியானது, தான் ஹிப் பேட்களைப் பயன்படுத்துகிறேன் அல்லது தன் இடுப்புக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டேன் என்று சிலர் கூறுவதாகவும், அந்த நாட்களில், “Fanta Bottle Structure” (எலும்புக்கூடு) போன்று மிகவும் பயங்கரமான கருத்துக்களை தன் உடல் அமைப்பை வைத்து பள்ளி நண்பர்கள் தெரிவித்ததாகவும், மேலும், தனது கல்லூரி நாட்களில் வகுப்புத் தோழி ஒருவர் தனது உடல் அமைப்பைக் கேலி செய்து வரைந்ததாகவும், இவை அனைத்தும் தன்னைக் கடுமையாகப் பாதித்ததாகவும் நடிகை திவ்யாபாரதி ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான உருவ கேலி தன் உடலை வெறுக்கும் அளவுக்கு தன்னைத் தள்ளியது, என்றும் மக்கள் முன் நடக்க கூட பயமாக இருந்ததாகவும், அது எந்த வகையிலும் தன் தவறு அல்ல என்றும், அதன் பின்னர் 2015 இல், தான் ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கை ஆரம்பித்து தனது மாடலிங் பயணத்தை தொடங்கி உடல்வாகுக்காக பாராட்டுக்களை பெற ஆரம்பித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது தான் தன் இடுப்பை அறுவை சிகிச்சை செய்துள்ளதாக குறிப்பிடுகிறார்கள் என்றும், ஆனால் அப்படியான அறுவை சிகிச்சையை தான் செய்யவில்லை என்று திவ்யபாரதி தெரிவித்துள்ளார் .
விமர்சனங்களை மனதில் கொள்ளாத வரையிலும், பாராட்டுக்களை நம் தலையில் சுமக்காத வரையிலும், நாம் எப்போதும் வலிமையாகவும் அன்பாகவும் இருப்போம் என்றும் திவ்யபாரதி தெரிவித்துள்ளார்.
கலவையான விமர்சனம் சீயான் விக்ரம் நடிப்பில் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் அமின்பூரில் உள்ள உள்ளூர் ராகவேந்திரா நகர் காலனியில் வசிக்கும் சென்னைய்யா ( 55 )…
திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த புறத்தாக்குடியில் புனித சேவியர் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில்…
புகார் மீது புகார்.. சமீப காலமாகவே வடிவேலுவுடன் இணைந்து நடித்த பல நடிகர்கள் அவரை குறித்து பல புகார்களை அடுக்கி…
சுமாரான வரவேற்பு ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரின் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான…
திடீரென வைரல் ஆன பெண்… கடந்த ஆண்டு பிரயாக்ராஜ் கும்பமேளாவின் போது அங்கே மாலை விற்ற மோனலிசா என்ற 16…
This website uses cookies.