சர்ஜரி பண்ணா உங்களுக்கு என்ன?.. பாடி ஷேமிங் செய்த நெட்டிசனை விளாசிய திவ்ய பாரதி..!

Author: Vignesh
8 May 2024, 7:14 pm

பசங்களோட Latest Crush யாருனு கேட்டா இப்போ நம்ம திவ்யா பாரதினுதான் சொல்றாங்க. இவர் நடிப்பில் உருவாகி வெளியான பேச்சுலர்படம் சுமாரான வெற்றி பெற்றது. இந்த படம் வெளியான சூழலில் பரபரப்பை கிளப்பியது. இப்படத்தில் ஹீரோயினாக நடித்த திவ்யபாரதியை ஏதோ வடநாட்டு பெண், பாலிவுட் நடிகை என்றெல்லாம் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

divya bharathi - updatenews360

அவர் பக்காக கோயம்புத்தூர் பொண்ணு. 2015ம் ஆண்டு நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றவர். அதன் பிறகு மாடல் அழகியாக வலம் வந்து சில விளம்பர படங்களிலும் நடித்தார். இப்போது ஹீரோயின் ஆகிவிட்டார். இந்நிலையில், இவரின் உடல் அமைப்பு குறித்து கேலி கமெண்ட்களும் வரும். இந்நிலையில் திவ்ய பாரதி உருவக்கேலி குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து இருந்தார்.

Divyabharathi -updatenews360

அதில், சமீப நாட்களில், எனது உடல் வடிவம் போலியானது, நான் ஹிப் பேட்களைப் பயன்படுத்துகிறேன் அல்லது என் இடுப்புக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டேன் என்று சிலர் கூறுகிறார்கள். அந்த நாட்களில், “Fanta Bottle Structure” (எலும்புக்கூடு) போன்று மிகவும் பயங்கரமான கருத்துக்களை என் உடல் அமைப்பை வைத்து கூறினார்கள்.

Divya Bharathi - updatenews360

மேலும் படிக்க: விஜய்யின் Goat பட Climax-ல் கேமியோ ரோலில் பிரபல ஹீரோ.. அட இவரா? வந்தா நல்லா இருக்குமே..!

எனது கல்லூரி நாட்களில் எனது ஸ்லாம் புத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தை இணைத்துள்ளேன், அங்கு எனது வகுப்புத் தோழி ஒருவர் எனது உடல் அமைப்பைக் கேலி செய்து வரைந்ததை நீங்கள் பார்க்கலாம் இவை அனைத்தும் என்னைக் கடுமையாகப் பாதித்து, என் உடலை வெறுக்கும் அளவுக்கு என்னைத் தள்ளியது; மக்கள் முன் நடக்க கூட பயமாக இருந்தது. அது எந்த வகையிலும் என் தவறு அல்ல. அதன் பின்னர் 2015 இல், நான் ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கை ஆரம்பித்து எனது மாடலிங் பயணத்தை தொடங்கி உடல்வாகுக்காக பாராட்டுக்களை பெற ஆரம்பித்தேன்.

divya bharathi - updatenews360

மேலும் படிக்க: விஜய்யின் Goat பட Climax-ல் கேமியோ ரோலில் பிரபல ஹீரோ.. அட இவரா? வந்தா நல்லா இருக்குமே..!

நான் ஜிம்மிற்குள் நுழையவே இல்லை என்றாலும் அவர்களில் பலர் எனது வொர்க்அவுட் பற்றி கேட்கத் துவங்கினர். அனைத்திற்கும் எப்போதும் வெறுப்பவர்களும், ரசிப்பவர்களும் இருக்கிறார்கள் என்பதையும், நம் குறைகளை நாம் எப்படிப் பறைசாற்றுகிறோம் என்ற சக்தி நமக்குள்ளேயே இருக்கிறது என்பதையும் உணர்ந்தபோது, அது எனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது. விமர்சனங்களை மனதில் கொள்ளாத வரையிலும், பாராட்டுக்களை நம் தலையில் சுமக்காத வரையிலும், நாம் எப்போதும் வலிமையாகவும் அன்பாகவும் இருப்போம்” என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் வைரலானது.

Divya Bharathi -updatenews360

இந்நிலையில், மீண்டும் இதுகுறித்து பேசிய திவ்யபாரதி என்னுடைய உடல் வடிவம் போலியானது. நான் ஹிப் பேட்களைப் பயன்படுத்துகிறேன் போன்ற கமெண்ட்கள் வருகிறது. மேலும், என் இடுப்புக்கு அறுவை சிகிச்சை செய்தேன் என்ற கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். நான் அப்படி எல்லாம் செய்யவில்லை. இயற்கையாகவே என்னுடைய உடல் அமைப்பு அப்படி தான் இருக்கும் என்றும், அப்படியே நான் அறுவை சிகிச்சை செய்து இருந்தால் அது குறித்த கவலை உங்களுக்கு எதற்கு என்று காட்டமாக திவ்ய பாரதி கூறியுள்ளார்.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 240

    0

    0