அனிதா சம்பத் , பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்களின் வரிசையில் செய்தி வாசிப்பாளினியாக இருந்து மிகப்பெரிய அளவில் பிரபலமானவர்தான் திவ்யா துரைசாமி. இவர் பிரபல தனியார் நியூஸ் சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளியாக இருந்து வந்தார் .

அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்க துவங்கியது. ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
அது மிகப்பெரிய அளவுக்கு அவருக்கு பெயரும் புகழும் தேடி தரவில்லை என்றாலும் கூட தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க துவங்கியது.
ஆம் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் திவ்யா துரைசாமி நடித்திருந்தார். மேலும் அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த ப்ளூ ஸ்டார் திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார்.
டஸ்கி அழகியல் பார்ப்பதற்கு வசீகரத் தோற்றத்துடன் இருக்கும் திவ்யா துரைசாமி மிகக்குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.
இவர் தற்போது குக் வித் கோமாளி சீசன் 5 போட்டியாளராக கலந்து கொண்டு வந்திருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் தெறி படத்தில் வரும் சமந்தா போன்றே ஆடை அணிந்து கொண்டு அதே கெட்டப்பில் வந்து தோற்றமளித்திருக்கிறார்.
அதை பார்த்ததும் சமந்தாவை போலே அவ்வளவு அழகாய் இருக்கீங்களே என பலர் கூறினாலும் சிலர் சினிமா நடிகை போல் இல்லை என்றாலும் சீரியல் நடிகை போல் இருக்கிறீர்கள் என கமெண்ட் செய்து அந்த புகைப்படங்களை இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.