தமிழ் சினிமாவில் வில்லன் , ஹீரோ , குணசித்திர நடிகர் என தென்னிந்திய சினிமாவில் வலம் வந்துக்கொண்டிருக்கிறவர் நடிகர் சத்யராஜ். அவரது மகள் திவ்யா சத்தியராஜ். இவர் சமூக அக்கறையுள்ளவராக பல்வேறு காரியங்களில் தன்னை ஈடுபட்டு வருகிறார்.
இந்திய ஊட்டச்சத்து நிபுணரான திவ்யா அட்சய பாத்திரம் அறக்கட்டளை நல்லெண்ணத் தூதுவராகவும் உள்ளார். இந்நிறுவனம் அரசின் இலவச மதிய உணவுத் திட்டதை தமிழ்நாடு பள்ளிக் குழந்தைகளுக்காக நடைமுறைப்படுத்தி வருகிறது. இது ஊட்டச்சத்து குறைபாடுள்ள மற்றும் வசதி குறைந்த சமூகங்களுக்கு ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவை இலவசமாக வழங்கும் முயற்சியாகும் .
இந்நிலையில், சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் மருத்துவ துறையில் கலக்கி வரும் நிலையில், தினமும் தனது இன்ஸ்டா பக்கத்தில், உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகள் குறித்து பதிவுகளை போட்டு வருகிறார்.
இந்த நிலையில், திவ்யா சத்யராஜ் கோவையில் தனக்கு நடந்த பகீர் சம்பவம் ஒன்றை instagram பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், எனக்கு கோயம்புத்தூர் என்றாலே பயமாக இருக்கும் காரணம் என்னுடைய வளர்ச்சி பிடிக்காமல் எனது உறவினர்களை ஆள் வைத்து அடித்தனர். ஒருநாள் என்னை அடிக்க காசு கொடுத்து அடியாட்களை அனுப்பினார். அந்த சமயத்தில், எனக்கு மாதவிடாய் வந்தது ரத்தப்போக்கு அதிகமாக இருந்தது.
அந்த பதற்றத்தில், என்னுடைய செல்போனையும் தொலைத்துவிட்டேன். அதன் பின்னர், எப்படியோ அங்கிருந்து தப்பி சென்னைக்கு வந்துவிட்டேன். சென்னை வந்த பின்பும் அந்த சம்பவத்தால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தேன். அப்பாவுக்கு விஷயம் தெரிந்து மிகவும் கோபமடைந்தார். ஆனால், என் வாழ்க்கையில் ஆண்கள் எனக்காக சண்டையிடுவதை நான் விரும்பமாட்டேன்.
நானே அதை எதிர்கொள்வேன். பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள் மற்றும் இலங்கையில் தமிழர்கள் எதிர்கொண்டதை ஒப்பிடுகையில் எனக்கு நடந்தது ஒன்றுமே இல்லை என்பதை நான் அறிவேன். மதங்கள் கௌரவ கொலைக்காகவும் காதலர்களை பிரிக்கவும் பெண்களை இழிவுபடுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன.
நான் கடுமையாக தாக்கப்பட்டாலும், பரவாயில்லை. இதுபோன்ற கட்டமைக்கப்பட்ட மதங்களுக்கு எதிராக சமூகத்தில் நடக்கும் அநீதிகளை எதிர்த்தும் தொடர்ந்து குரல் கொடுப்பேன். வாழ்க்கை அவ்வளவு எளிதானது அல்ல. எனக்குள் இருக்கும் காயங்கள் இன்னும் ஆரவும் இல்லை. ஆனாலும், மனதில் அன்புடனும் தைரியத்தோடும் கோவைக்கு தொடர்ந்து செல்வேன். வலிமையான பெண்கள் அன்பு செலுத்துவதை நிறுத்த மாட்டார்கள் என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு பலருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது : இன்று நடைபெற்ற மருதமலை…
வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த கூலி தொழிலாளி ஜாகீர் (50) என்பவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 10…
This website uses cookies.