குடும்பம் நடத்திட்டு குழந்தை கொடுத்துட்டு ஏமாற்றிய கணவர்… 2 மாத கை குழந்தையுடன் வேலைக்கு சென்ற சீரியல் நடிகை!

Author: Shree
26 May 2023, 11:55 am

சன்டிவியில் ஒளிபரப்பாகும் செவ்வந்தி டிவி சீரியலில் நடித்து பிரபலமானவர் திவ்யா. மேலும் அர்னவ் உடன் சேர்ந்து திவ்யா’ கேளடி கண்மணி’ சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானார்கள். அப்போது ஏற்பட்ட நெருக்கம் காதலாக மாறி இருவரும் ரகசிய திருமணம் செய்துக்கொண்டார்கள். ஏற்கனவே திவ்யா வேறொருவருடன் திருமணமாகி விவாகரத்து பெற்றவர் அவருக்கு ஒரு மகளும் இருக்கிறார்.

திவ்யா அர்னவின் குழந்தையை வயிற்றில் சுமந்து வந்தார். எவ்வளவோ பேசியும் காதலை தெரிவித்தும் அர்னவ் புறிந்துக்கொண்டு திவ்யாவை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் அர்னவ் தற்போது சீரியல் நடிகை அன்ஷிதா என்பவரை காதலித்து வருகிறார். இதனால் கடுங்கோபமடைந்த திவ்யா அர்னவ் மீது வழக்கு தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார். அர்னவ் ஜாமினில் வெளியில் வந்துவிட்டார். இருந்தும் தன்னை புரிந்துக்கொண்டு ஏற்றுக்கொள்ளவில்லை என திவ்யா மனம் வருந்தி கூறி வந்தார்.

இதையடுத்து திவ்யா அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். குழந்தையின் அழகான போட்டோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார் திவ்யா. இதை பார்த்த ரசிகர்கள் இனிமேலாவது அர்னவ் சேர்ந்து வாழ்வரா? ஈகோவை விட்டு விட்டு குழந்தையை வந்து பாருங்கள் மனைவியுடன் மகிழ்சியாக வாழுங்கள். இப்படி ஒரு தேவதை பிறந்தும் மனம் மாறாத அரக்கனாக இருக்கும் அரன்வை பலர் திட்டி தீர்த்தனர்.

அதன் பின்னர் பேட்டி ஒன்றில் பிறந்த மகளை குறித்து ,மனம் திறந்து பேசியுள்ள அரனவ், நான் காதலுக்காக என்னுடைய பெற்றோரை எதிர்த்து குடும்பத்தை எதிர்த்து தான் வெளியே வந்தேன். ஆனால் அந்த காதலால் நான் அதிகமாக வேதனையை அனுபவித்து விட்டேன். அதற்காக இப்ப வரைக்கும் தண்டனையை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறேன். என் மகளை பார்க்க வேண்டும் என்ற ஆசை அதிகம் உள்ளது.

நான் ஊரில் உள்ள பல குழந்தைகளை நான் தூக்கி வைத்து விளையாடுவேன். ஆனால் இப்போது என்னுடைய குழந்தையை தூக்க முடியாமல் தவிக்கிறேன். வீடியோ காலிலாவது குழந்தையை பார்க்க வேண்டும். ஆனால், இனியும் திவ்யா உடன் சேர்ந்து வாழ்வதற்கு விருப்பம் இல்லை அவர் எனக்கு அவ்வளவு வலிகளையும் வேதனையும் கொடுத்துவிட்டார் என வருத்தத்துடன் கூறினார். ஆனால் தற்போது வரை பிறந்த குழந்தையை அர்னாவ் நேரில் சென்று பார்க்கவில்லை.

குழந்தை மீது பாசம் இருப்பது போல பேட்டிகளிலும், டிவி ஷோக்களில் மட்டும் பேசி வருகிறார். ஒரு பேட்டியில் அர்னாவ் பேசும்போது தனது குடும்பம் நாசமாக போகும் என திவ்யா மண்ணை வாரி தூற்றிவிட்டு சாபம் விட்டு போனார். எனவே அவரின் முகத்தை பார்க்க கூட விரும்பவில்லை. அவரிடம் குழந்தையை காட்டும்படி நான் ஒருபோதும் கேட்க மாட்டேன் என தடாலடியாக கூறி இருக்கிறார். இந்நிலையில் திவ்யா 2 மாத கை குழந்தையுடன் ஷூட்டிங் சென்றுள்ளார் இந்த வீடியோவை வெளியிட அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…