என் ஆடையை கழட்ட சொன்னாங்க..பிரபல தொகுப்பாளர் DD சொன்ன அதிர்ச்சி தகவல்.!
Author: Selvan19 March 2025, 8:06 pm
நிகழ்ச்சியில் நேர்ந்த மோசமான அனுபவம்
விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினியான திவ்யதர்ஷினி,காபி வித் டிடி நிகழ்ச்சி மூலம் பெரும் புகழைப் பெற்றவர்.சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும், இவர் தொகுப்பாளினியாகவே அதிகமாக அறியப்படுகிறார்.
இதையும் படியுங்க: அந்த பாட்டு இருக்கும் போது எப்படிங்க..CSK-விற்கு தீம் மியூசிக் போட மறுத்த அனிருத்.!
இதற்கிடையில்,அவரது திருமண வாழ்க்கை முறிவுக்கு உள்ளானது.மேலும்,முழங்கால் பிரச்சனையால் அவதிப்பட்டு,தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.பொது நிகழ்ச்சிகளில் வாக்கிங் ஸ்டிக்குடன் நடந்து செல்லும் அவரது புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது.

இந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்துள்ளார்.சமீபத்தில் அவர் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில்,தனக்கு நேர்ந்த ஒரு மோசமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில்,அவர் நேர்காணல் செய்த பிரபலமான நடிகை ஒருவர்,இவர் அணிந்திருந்த அதே சேலையை அணிந்து வந்ததால்,இவரை ஆடை மாற்ற முடியுமா என்று கேட்டுள்ளனர்,அதற்கு அவர் தன்னிடம் மாற்ற ஆடை இல்லை என்று கூறி,அந்த நேர்காணலில் அந்த பிரபல நடிகையை உரிய மரியாதையுடன் பேட்டி எடுத்ததாக கூறியுள்ளார்.
மேலும் அந்த கேள்வி எனக்கு மிகவும் வேதனை அளித்ததாக கூறியிருப்பார்.