சைடு பிசினஸாக.. அந்த தொழில் செய்து கல்லா கட்டும் DD.. ஒரு மாத வருமானம் இவ்வளவா?

Author: Vignesh
14 May 2024, 4:41 pm

டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்கும் வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.

மேலும் படிக்க: கௌதம் மேனனுக்கு கைகொடுக்கும் சூப்பர் ஸ்டார்.. தரமான காம்போவா இருக்கே..!

நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். மேலும், அதர்வா மணிகண்டன் நடிப்பில் வெளிவந்த மத்தகம் என்ற வெப் தொடரிலும் நடித்திருக்கிறார். கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர்.

அதை எல்லாம் கடந்து, தற்போது, 39 வயதாகும் DD இன்னும் திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாக இருந்து வரும் டிடி தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் படிக்க: அவன் கேடின்னா?.. அவள் ஜில்லா கேடி.. பிரபலத்தை டார் டாராக கிழித்து தொங்கவிட்ட பாடகி சுசித்ரா..!

இந்நிலையில், தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், டாப் விஜேவாக இருக்கும் டிடி-யின் சொத்து மதிப்பு ரூ. 5 கோடிக்கும் மேல் இருக்குமாம். அதுமட்டுமின்றி டிடி தனியாக பிசினஸும் செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகிறாராம். மேலும், இவர் ஒரு எபிசோட் தொகுத்து வழங்க ரூ. 4 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. துபாய் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்று நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதற்கு 8 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருவதாகவும், உள்ளூர் நிகழ்ச்சிகளுக்கு ஒரு ரேட் வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு ஒரு ரேட் என்று டிடி வருமானம் ஈட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 245

    0

    0