ஓடிடி-யில் வெளியாகும் தீபாவளி மாஸ் ஹிட் படம்…அட எப்போங்க..!

Author: Selvan
23 November 2024, 8:59 pm

தீபாவளி ஹிட் படங்கள்

கடந்த தீபாவளி அன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வசூலில் பட்டையை கிளப்பியது.

அதுகூடவே பிரதர்,ப்ளடி பெக்கர்,லக்கி பாஸ்கர் போன்ற படங்கள் வெளியானது.ஆனால் லக்கி பாஸ்கர் படம் மட்டுமே அமரனுக்கு அடுத்த படியாக ரசிகர்களை கவர்ந்தது.

Dulquer Salmaan's 100-crore hit movie

ஓடிடியில் லக்கி பாஸ்கர்

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தெலுங்கில் உருவாகி பான் இந்திய மொழிகளில் வெளியாகி,வசூல் வேட்டையை பெற்றது.இப்படத்தில் துல்கர் சல்மான்,பாஸ்கர் கதாபாத்திரத்தில் எளிமையாக நடித்திருப்பார்.

அவருக்கு மனைவியாக மீனாட்சி சவுத்ரி நடித்திருப்பார்.வங்கி மற்றும் பங்குச்சந்தைகளிள் நடக்கின்ற ஊழல்களை இப்படம் காட்டிருக்கும்.படம் முழுவதும் விறுவிறுப்பான காட்சிகளை வைத்து இயக்குனர் மிரட்டியிருப்பார்.

படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்திருப்பார்.படத்தின் பாடல்களும் ஹிட் ஆனது.100 கோடி வசூலை ஈட்டிய இப்படம் துல்கர் சல்மானின் தொடர் தோல்விகளுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

இதையும் படியுங்க: சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட ஆர்.ஜே.பாலாஜி…எதற்குனு தெரியுமா..?

இந்நிலையில் லக்கி பாஸ்கர் படத்தின் OTT ரிலீஸ் நெட்ப்ளிஸ் தளத்தில்,நவம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது.இதனால் ஓடிடியிலும் இப்படம் வசூலை அள்ளும் என எதிர்பாக்கப்படுகிறது.

  • Revanth Reddy on Pushpa 2ரேவந்த் ரெட்டியை சந்திக்க தயார்…அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக கிளம்பிய திரையுலகினர்..!
  • Views: - 103

    0

    0