ராஜபரம்பரைக்கு ஈடாக ஜாம் ஜாம்னு நடந்த திருமணம் – விஜயகுமார் வீட்டுக்கு படையெடுத்த பிரபலங்கள்!
Author: Rajesh19 February 2024, 8:45 pm
தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான விஜயகுமார் தமிழ், தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். 1961ல் வெளிவந்த சிறீ வள்ளி என்ற திரைப்படத்தில் முருகனாக நடித்து இவர் சுமார் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக மிகவும் கௌரமான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டார். முத்துக்கண்ணு என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்ட இவர் அவரை விவாகரத்து செய்துவிட்டு நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். முதல் மனைவிக்கு பிறந்தவர் நடிகர் அருண் விஜய் ஆவார், இவருக்கு கவிதா, அனிதா, வனிதா, பிரிதா, ஸ்ரீ தேவி என்ற பெண்கள் உள்ளனர்.
இந்நிலையில் விஜயகுமாரின் பேத்தியின் மகள் அனிதாவின் மகளுமான திவ்யாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் நடிகை ஸ்ரீதேவி , நடிகை ப்ரீத்தா , அனிதா விஜயகுமார், பேரன், பேத்திகள் என ஒட்டுமொத்த குடும்பமும் ஒன்று சேர்ந்து பிரம்மாண்டமாக குடும்ப விழாவாக கொண்டாடியுள்ளனர்.
இந்த திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ஷெர்டன் கிராண்ட் ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. வீட்டில் ஒட்டுமொத்த உறவினர்களும் கூடி பந்தக்கால் நாடும் விழாவை நடத்தினர். அன்றே சுமங்கி பூஜை நடைபெற்றது. அதன் பின்னர் மெஹந்தி விழா நடத்தினர். அதன் பின்னர் சங்கீத் திருவிழா களைகட்டிய நிலையில், நேற்று ஹல்தி பங்க்ஷன் நடைபெற்றது. அப்போது இரவு பார்ட்டியில் குடும்பங்கள் ஒன்றுகூடி நடனமாடி மகிழ்ச்சியாக இருந்தனர்.
இதையடுத்து இன்று காலை தியாவின் திருமணம் மகாபலிபுரத்தில் ஷெர்டன் கிராண்ட் ஹோட்டலில் பிரம்மண்டமாக நடைபெற்றது. இத்திருமணத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் தனுஷ், சூர்யாவின் குடும்பத்தினர், மீனா, சினேகா உள்பட ஏராளமானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.