இதெல்லாம் ‘விடாமுயற்சி’யில் கிடையாது.. அஜித் ரசிகர்களே கொஞ்சம் கவனிங்க!

Author: Hariharasudhan
29 January 2025, 1:00 pm

விடாமுயற்சி படத்தில் மாஸான எண்ட்ரி அஜித்குமாருக்கு கிடையாது என அதன் இயக்குநர் மகிழ் திருமேனி கூறியுள்ளார்.

சென்னை: இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியத்தில், அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா மற்றும் ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் விடாமுயற்சி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும், இதுவரை இப்படத்திலிருந்து வெளியன பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதேநேரம், விடாமுயற்சி ட்ரெய்லரும் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. இதனிடையே, விடாமுயற்சி படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ப்ரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இயக்குநர் மகிழ் திருமேனி பல்வேறு பேட்டிகளை அளித்து வருகிறார்.

Magizh Thirumeni about Vidaamuyarchi AK Entry scene

அதில் ஒரு பேட்டியில் பேசிய இயக்குநர் மகிழ் திருமேனி, “விடாமுயற்சி படத்தை திறந்த மனதுடன் பார்க்க வாருங்கள். இந்தப் படத்தில் அஜித்துக்கு பிரமாண்ட எண்ட்ரி சீன் கிடையாது, பஞ்ச் வசனங்கள் எதுவும் அவர் பேச மாட்டார். பயங்கர பில்டப் உடன் கூடிய இண்டர்வல் காட்சியும் கிடையாது. ஆனாலும், இந்தப் படம் ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரையும் திருப்திப்படுத்தும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: திருமணம் செய்யாமலேயே தாயான பிரபல நடிகை… விமர்சிப்பவர்களுக்கு இதுதான் பதிலடி..!

மேலும் வேறு ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “கார் பந்தயp பணிகளுக்காக ஒரே நேரத்தில் இரண்டு படப்பிடிப்புகளில் அஜித் பங்கேற்றார். ஒரு வாரத்துக்கு தூக்கமின்றி அவர் பணியாற்றினார். விடாமுயற்சி படம் ஆக்‌ஷன், திரில்லர் வகையில் இருக்கும். மேலும், பெண்களுடன் உரையாடும் திரைப்படமாகவும் விடாமுயற்சி இருக்கும்” என மகிழ் திருமேனி கூறியுள்ளார்.

இப்படம், பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகவுள்ளது. எனவே, சிறப்புக் காட்சிக்கான அனுமதிக்காக ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!