ரஜினி கை விரல்கள் ஏன் எப்பவும் அப்படியே இருக்கு? ரகசியத்துக்கு காரணமே இதுதான்!

Author: Udayachandran RadhaKrishnan
18 October 2024, 5:11 am

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ள ரஜினிகாந்த்தின் கை விரல்கள் பற்றி சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முதலில் பஸ் கண்டக்டராக பணியாற்றினார். பின்னர் அவரை சினிமாவுக்கு அழைத்து வந்து நடிகராக்கியது இயக்குநர் பாலச்சந்தர்தான். அபூர்வ ராகங்கள் படம் மூலம் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த அவர் பின்னாளில் சூப்பர் ஸ்டாராக மாறினார்.

வில்லனாக நடித்து வந்த ரஜினிகாந்த்துக்கு திருப்புமுனை தந்த படம் 16 வயதினிலே. பரட்டை என்கிற வில்லன் கேரக்டரில் ரசிகர்கள் மனதில் பதிந்த அவர், பைரவி படம் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.

rajinikanth Kamal

படிப்டிபயாக தனது நடிப்பு, ஸ்டைல், சண்டை என ரசிகர்களை கவர்ந்து உச்ச நட்சத்திரமாக மாறினார். இன்று வரை வசூல் சக்கரவர்த்தியாகவும், நம்பர் 1 நடிகராக ஜொலித்து வருகிறார்.

rajinikanth hand gesture

சினிமாவில் அதிக நாட்டம் கொண்டது போல் ஆன்மீகத்தில் அதிக விருப்பமுள்ள ரஜினிகாந்த், அடிக்கடி இமயமலைக்கு புறப்படுவது வழக்கமாக கொண்டு வந்தார். தியானத்தில் அதிக ஈடுபாடு உள்ள ரஜினிகாந்த் எப்போதும் தனது ஆள்காட்டி விரல் மற்றும் கட்டை விரலை சேர்த்து தான் வைத்திருப்பார்.

மேலும் படிக்க: வீடு திரும்பிய ரஜினி கவனமாக இருக்க வேண்டும் : மருத்துவர்கள் கூறிய அட்வைஸ்..!!

rajinikanth Hand sign

இதை அவருடைய புகைப்படத்தில் அதிக இடங்களில் பார்க்கலாம். அதற்கும் ஒரு காரணம் உண்டு. அதாவது அந்த இரண்டு விரல்களையும் சேர்த்து வைப்பதை முத்ரா என கூறுவதுண்டு.

rajinikanth hand symbol

அடிக்கடி இந்த விரல்களை சேர்த்து வைப்பதால் மூளை நரம்புகள் நன்றாக வேலை செய்யும் என கூறப்படுகிறது. சின் முத்ரா என இந்த முத்திரைக்கு பெயர். மன அழுத்தம், நினைவாற்றல் குறையும் என்றும், தூக்கமின்மை, கோபம், தலைவலி போன்றவற்றை இந்த முத்ரா நீக்குவதாக சொல்லப்படுகிறது. இதைத்தான் ரஜினி அதிகமாக ஃபாலோ செய்கிறார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ