சொகுசு வாழ்க்கையை உதறி வாடகை வீட்டில் வசிக்கும் பார்த்திபன்.. சொத்து மதிப்பு தெரியுமா?
Author: Udayachandran RadhaKrishnan15 November 2024, 4:16 pm
தமிழ் சினிமாவில் கடினமான பாதையை தேர்வு செய்து புதிய பாதையை அமைத்தவர் நடிகர் பார்த்திபன்.
நடிகராக மட்டுமல்ல இயக்குநராக இவர் எடுத்த படம் அத்தனையும் வித்தியாசம் தான். வித்தியாசத்துக்கே வித்தியாசம் காட்டு பார்த்திபனுக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு வயது 66.
தேசிய விருது பெற்ற முதல் படம்
1957ஆம் ஆண்டு நம்பர் மாதம் 15ம் தேதி பிறந்த பார்த்திபன் சினிமா ஆர்வம் காரணமாக பிரபல நடிகர், இயக்குநர் பாக்யராஜ் உடன் துணை இயக்குனராக பணியாற்றினார்.
துணை இயக்குனராக பணியாற்றிக் கொண்டே சில படங்களில் நடிக்கவும் செய்தார். துணை கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்த பார்த்திபன், தாவணிக் கனவுகள் படம் மூலம் பிரபலமானார்.
1990ஆம் ஆண்டு வெளியான புதிய பாதை படம் மூலம் கதாநாயகனாகவும், இயக்குநராகவும் அறிமுகமானார். இந்த படத்துக்காக தமிழ்நாடு மாநில அரசு விருது, சிறந்த படத்திற்கான தேசிய விருது உட்பட பல விருதுகள் கிடைத்தது வெற்றிக் கொடியை நாட்டினார்.
இந்த படத்தின் வெற்றியால் பார்த்திபன் சீதாவுக்கு இடையே நெருக்கம் ஏற்பட்டு காதலிக்க துவங்கினர். ஆனால் சீதாவின் பெற்றோர் எதிர்க்கவே, பார்த்திபன் அதையும் மீறி தாலி கட்டி திருமணமும் செய்தார்.
பார்த்திபன் – சீதா பிரிவு
இந்த தம்பதிக்கு அபிநயா,கீர்த்தனா என்ற பெண் குழந்தைகள் உள்ள நிலையில் ராக்கி என்ற மகனை தத்தெடுத்து வளர்த்தனர். ஆனால் யார் கண்பட்டதோ பார்த்திபன் – சீதா தம்பதியினர் 11 வருடங்களில் திருமண வாழ்க்கையை விட்டு பிரிந்தனர்.
குழந்தைகளுக்காக மட்டும் இருவரும் சேர்ந்து தான் முடிவெடுக்கின்றனர். கீர்ததனா மற்றும் அபிநயா திருமணத்தில் இருவரும் சேர்ந்துதான் இருந்தனர்.
இதையும் படியுங்க: மகனுக்காக படப்பிடிப்பில் காஜல் அகர்வால் செய்த செயல் : ராயல் சல்யூட்!
இதையடுத்து பார்த்திபன் சினிமாவில் கூடுதல் கவனம் செலுத்தினார். இரவின் நிழல், டீன்ஸ் படம் நல்ல பெயரையும், வசூலையும் வாரி குவித்தது.
சொத்து மதிப்பு
பார்த்திபன் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். ஒரு படத்திற்கு ₹3 முதல் ₹5 கோடி வரை சம்பளம் பெறுகிறார்.
ஆனால் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறார். இது அவரே டீன்ஸ் பட புரோமோஷன் நிகழ்ச்சியில் கூறியுள்ளார். சில படங்களை தயாரித்தது மூலம் ₹50 கோடி வரை சொத்துக்கு அதிபதியாக உள்ளார்.
எவ்வளவு சொத்து இருந்தாலும், சிறுவயதில் ஏழ்மை நிலையில் வாழ்ந்ததை மறக்கமுடியாத பார்த்திபன் இன்றும் எளிமையாகவே வாழ்ந்து வருகிறார்.