பீல்டு அவுட் ஆனால் என்ன? பீக்கில் இருந்தபோதே வெயிட்டா அள்ளியாச்சு – பிரஷாந்தின் Net Worth..!

Author: Vignesh
9 April 2024, 12:38 pm

தமிழ் திரையுலகில் விஜய் – அஜித்தை விட 90ஸ் காலகட்டத்தில் டாப்பில் இருந்தவர் நடிகர் பிரசாந்த். 1990ம் ஆண்டு வெளியான வைகாசி பொறந்தாச்சு என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், ஆரம்ப காலகட்டங்கள் முதல் நிறைய வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் படிக்க: தொட்டதெல்லாம் ஹிட்டு.. குவியும் துட்டு.. பத்து தலைமுறைக்கும் சொத்து சேர்த்து வைத்த AR ரகுமான்..!

ஐஸ்வர்யா ராய், ஷாலினி, சிம்ரன், ஜோதிகா என டாப் ஹீரோயின்கள் ஜோடியாக நடித்து ரொமான்டிக் ஹீரோவாக வலம் வந்த இவர், திடீரென மார்க்கெட்டை இழந்து ஃபீல்ட் அவுட் ஆனதற்கான ஷாக்கிங் காரணம் இதுதானாம். அதாவது அவருடைய திருமண வாழ்க்கை தான் காரணம் என சொல்லப்படுகிறது.

2005ம் ஆண்டு கிரகலட்சுமி என்பவருடன் நடிகர் பிரசாந்துக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் தான் கிரகலட்சுமி ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது பிரசாந்த் அவர்களின் குடும்பத்திற்கு தெரிய வருகிறது. இதனால் பிரசாந்த் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் நடந்தது. பின்னர், கடந்த 2009ம் ஆண்டு, பிரசாந்த் அவர்கள் கிரகலட்சுமியை விவாகரத்து செய்தார்.

இந்த சம்பவத்தினால் பிரசாந்தின் குடும்பம் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி போயுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பின்னர் தான், பிரசாந்தால் சினிமாவில் சரியாக காசன்ட்ரேட் செய்ய முடியவில்லை என்றும், அவரது சினிமா வாழ்க்கையும் தலைகீழாக மாற முக்கிய காரணம் என்றும் கூறப்பட்டது.

மேலும் படிக்க: அதுக்காக நானும் விஷாலும் கெஞ்சி கூட பாத்துட்டோம்.. ஒன்னும் வேலைக்கு ஆகல.. சுந்தர் சி வருத்தம்..!

இந்த நிலையில், மீண்டும் தன்னுடைய கேரியரை தூக்கி நிறுத்த போராடிவரும் பிரசாந்த் ஹீரோவாக நடித்துள்ளார். ‘அந்தகண்’ திரைப்படம் விரைவில், வெளியாக உள்ளது. இதுதவிர தளபதி விஜய் ஹீரோவாக நடித்தவர். கோட் படத்திலும் பிரசாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வருகிறார். மேலும், இவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

prashanth

பல வருடங்களாக சினிமா வாய்ப்பு இல்லை என்றாலும், மாதம் தோறும் கோடிகளில் படம் வந்து விடுகிறது. டி நகரில் பிரம்மாண்ட இடம் ஒன்றை வாங்கிக் கொண்டிருந்தார். தற்போது, அந்த இடத்தில் பிரஷாந்த் கோல்ட் டவர் என்கிற 17 மாடிகள் கொண்ட பிரம்மாண்ட கட்டிடம் ஒன்றை கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். அதில், தான் உலகில் மிகப்பெரிய ஷோரூம் ஆன ஜோஸ் ஆலுக்காஸ் இங்கு வருகிறது.

prashanth

8 மாதங்களில் மொத்தம் ஒரு லட்சம் சதுர அடிகள் திறக்கப்பட்ட ஷோரூம் என்ற பெருமை இதற்கு உண்டு. இதைத்தவிர, மற்ற மாடிகளிலும் பல கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதன் மூலம், மட்டுமே பல லட்சம் பிரசாந்துக்கு கிடைக்கிறதாம். இந்த இடத்தில் தான் பிரசாந்தின் அலுவலகமும் இயங்கி வருகிறது. இவரின் சொத்துமதிப்பு மட்டும் ரூ.85 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

  • Madha Gaja raja massive hits and breaks in Blockbuster office பிளாக்பஸ்டர் ஹிட்டான மதகஜராஜா.. 10 நாளில் பட்டையை கிளப்பிய வசூல்..!!