17 வயசிலேயே First Night.. ரஜினி பட வில்லனுக்கு 4-ஆவது மனைவியான பிரபல நடிகை..!

Author: Vignesh
26 June 2024, 3:46 pm

தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அஞ்சு. உதிரி பூக்கள், மீண்டும் கோகிலா போன்ற படங்களில் நடித்த பிறகு கதாநாயகியாக ஒரு சில படங்களிலும் நடித்திருக்கிறார். இவருக்கு ஹார்மோன் பிரச்சனை காரணமாக உடல் எடை கூடுவிட்டதால் சினிமா வாய்ப்புகள் இவருக்கு குறைய தொடங்கி குணச்சித்திர கதாபாத்திரங்களில் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

anju-prabhakar

இவர் கன்னட நடிகர் டைகர் பிரபாகரனை 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதை அடுத்து, 1996 ஆம் ஆண்டு விவாகரத்தையும் பெற்றுள்ளார். இவருக்கு 25 வயதில் ஒரு மகன் உள்ளார். கன்னட நடிகரான டைகர் பிரபாகரன் தமிழ் படங்களில் நடித்திருந்தாலும், அவர் அனைவருக்கும் பரிச்சயமானது ரஜினிகாந்த் நடித்த முத்து திரைப்படம் தான்.

anju-prabhakar

பெரும்பாலும், வில்லன் நடிகராகவே இவர் நடித்திருக்கிறார். இவரது கணவருக்கு மூன்று திருமணங்கள் நடந்த நிலையில் நான்காவது திருமணமாக அஞ்சுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். டைகர் பிரபாகரன் தனது 52 வது வயதில் 2021 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

rajini

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அஞ்சு தனது திருமண வாழ்க்கை குறித்தும் சினிமா வாழ்க்கை குறித்தும் பேசியுள்ளார். அதில், என்னை விட 30 வயது மூத்த நடிகர் ஆன டைகர் பிரபாகரனை திருமணம் செய்து கொண்டேன். 17 வயதாக இருக்கும் போதே திருமணம் நடந்தது. 17 வயதிலேயே திருமண உறவு என்பதால் முதலிரவு குறைத்தும் திருமண வாழ்க்கை குறித்தும் சரியான புரிதல் இல்லை.

anju-prabhakar

இதனால், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மேலும், அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது. இதனால், எனக்கு மனவேதனை ஏற்பட்டது. 17 வயதாக உள்ள தன்னை விட்டுவிட்டு இன்னொரு பெண்ணை தேடுகிறாரே இவருடன் எப்படி வாழ்வது என விவாகரத்து செய்து விட்டேன்.

anju-prabhakar

மகனுக்காக தனியாக வாழ்ந்து வந்தேன். மகனைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்தேன். மேலும், தனக்கு ஏன் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க வில்லை என்று பல நாள் யோசித்திருக்கிறேன். பல ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன். ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் நூறாவது நாள் விழாவிற்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன்.

anju-prabhakar

அப்போது, என்னை பார்த்த மகேந்திரன் உதிரிப்பூக்கள் படத்துக்கு குழந்தையாக நடிக்க எங்களிடம் கேட்டார். அதுதான், என்னுடைய முதல் படம் எந்த ஒரு நேரத்திலும் எந்த ஒரு காலத்திலும் எவ்வளவு பணம் கொடுத்தால்தான் நடிப்பேன். இந்த கேரக்டர் கொடுத்தால்தான் நடிப்பேன் என்று அடம் பிடித்தது கிடையாது. எது கொடுத்தாலும் அதில் சிறப்பாக என்னுடைய நடிப்பை வெளிகாட்டி இருக்கிறேன். ஆனாலும், என்னை சினிமாவில் ஒதுக்கினார்கள். என்ன காரணம் என்று எனக்கு தெரியாமல் இருந்தது. ஒரு கட்டத்தில் நான் குண்டாக இருப்பது தான் காரணம் எனக் கூறி வந்தார்கள்.

anju-prabhakar

சினிமாவில் குஷ்பூவும், மீனாவும் குண்டாகத்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் வாய்ப்பு கொடுக்கிறார்கள் என நான் பலமுறை வேதனைப்பட்டு இருக்கிறேன். அதன் பிறகு, தமிழ் சினிமா பக்கம் வராமல் மலையாள சினிமா பக்கம் சென்று அங்கு நடிக்க ஆரம்பித்தேன். அங்கு நடிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தார்கள். என்னுடைய உடல் பருமனை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதனால், பல படங்களில் நடித்தேன்.

anju-prabhakar

தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் நல்ல நடிகைகளே இல்லை என கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் நல்ல நடிகைகளை அழைப்பது கிடையாது. இப்போது, படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறேன். இதற்குப் பிறகு மீண்டும் என்னை திரையில் பார்க்கலாம் என்று அஞ்சு தெரிவித்து உள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி