நடிகையுடன் வலுக்கட்டாயமாக காதல்.. ராதிகாவையும் விட்டுவைக்காத சுதாகர்; பயில்வான் ஓபன் டாக்..!

Author: Vignesh
24 December 2023, 12:29 pm

தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயம் என்று புகழப்பட்டு பல மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் பாரதிராஜா. இவர் இயக்கத்தில் அறிமுகமாகி தற்போது டாப் இடத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் பல பேர் உள்ளனர்.

அந்த வரிசையில், 1978ல் கிழக்கே போகும் ரயில் படத்தில் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டவர் தான் சுதாகர் இவர் தெலுங்கு பேசும் நடிகர். இவரை பாரதிராஜா அறிமுகம் செய்து வைத்தது அப்போது பேசுபொருளானது.

sudhakar

இதன் பின்னர் தென்னிந்திய சினிமாவில் டாப் இடத்தில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார் நடிகர் சுதாகர். தற்போது, பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் அளித்த பேட்டியில், நடிகை ராதிகாவை காதலித்து பின்னர் பிரிந்து விட்டார். அதன் பின்னர், நடிகை ஜெயசித்ராவை காதலிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி சுதாகர் வலுக்கட்டாயமாக ரோஜாப்பூ கொடுத்து காதலித்து வந்துள்ளார் என்று தெரிவித்திருந்தார்.

மேலும், கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டதற்கு மூன்று லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று சுதாகர் கேட்டதாகவும், அதற்கு நான் எவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருக்கிறேன். எல்லாம் உனக்குத்தானே என்று ஜெயசித்ரா சொன்னதாகவும், அதன் பின்னர் கல்லூரி மாணவியை காதலித்து சுதாகர் திருமணம் செய்து கொண்டதாகவும், பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். தற்போது சுதாகர் வயோதிக நிலையில், ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படங்கள் இணையதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!