தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தந்தையின் உதவியுடன் சினிமாவில் அறிமுகமாகி இன்று “தளபதி” என்று ரசிகர்களால் அழைக்கப்படும் முன்னணி நடிகராக சிறந்து விளங்கி வருகிறார்.
விஜய் தனது 10 வயதில் வெற்றி என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பின்னர் 1992ல் நாளைய தீர்ப்பு படத்தில் நடித்து ஹீரோவானார். முதல் படத்தில் நிறைய விமர்சனங்களை எதிர் கொண்டாலும் தொடர்ந்து முயற்சியை கைவிடாமல் நடித்து வருகிறார்.
இந்நிலையில் விஜய் தனது முதல் பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமான பூவே உனக்காக படத்தில் ரூ. 5 லட்சம் மட்டுமே சம்பளமாக வாங்கியுள்ளார். கடைசியாக விஜய் வாரிசு படத்திற்காக ரூ. 125 கோடி சம்பளமாக வாங்கியது குறிப்பிடத்தக்கது.