நயன்தாராவின் அழகான, அடர்த்தியான புருவத்தின் ரகசியம் என்ன தெரியுமா?

Author: Shree
9 September 2023, 8:57 am

கோலிவுட் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராகவும் ஸ்டார் ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் ஒரே நடிகையாகவும் இருந்து வரும் நயன்தாரா மலையாள குடும்பத்தை சேர்ந்தவர். இவர் தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகனார், அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார்.

பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. அவ்வப்போது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார். மகன்களுக்கு “உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் ” என தன் பெயரையும் நயன்தாரா பெயரையும் உயிர் , உலகம் என்பதன் அடிப்படையில் வைத்துள்ளனர்.

தொடர்ந்து சில சிக்கல், படுதோல்விகள், கணவருக்கு கைநழுவிப்போன வாய்ப்புகள் என சோகத்தில் மூழ்கிய நயன்தாரா கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்து தொடர்ந்து வேளைகளில் கவனம் செலுத்தி வருகிறார். ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்து விட்டார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.

நயன்தாரா குறித்து எந்த ஒரு விஷயம் வெளியானாலும் அது சமூகவலைத்தளங்களில் வைரலாகிவிடும். அப்படித்தான் தற்போது நயன்தாராவின் அழகான புருவத்தின் ரகசியம் பற்றி தெரியவந்துள்ளது. தினமும் இரவில் தூங்கப்போகும்போது விளக்கெண்ணெய் புருவத்தில் தடவிக்கொண்டு தான் தூங்குவாராம். மேலும் தலைமுடிக்கும் சீரம் தடவுவது போன்று புருவத்திற்கும் சீரம் தடவுவாராம். அத்துடன் புருவத்திற்கு சுத்தமான ரசாயனம் கலக்காத தேங்காய் தடவி மசாஜ் செய்வாராம். இதெல்லாம் நயன்தாராவின் அழகான புருவத்திற்கு காரணமாம்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 443

    0

    0