தலைக்கு தில்லு பார்த்தியா…? அப்போவே மடக்க பார்த்தேன் மிஸ் ஆகிடுச்சு – பிரபல நடிகைக்கு ஸ்கெட்ச் போட்ட பாபா பாஸ்கர் !
Author: Shree29 May 2023, 1:45 pm
நடிகரும், நடன இயக்குனருமான பாபா பாஸ்கர் இந்தி,மலையாளம், கன்னடம் மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்திருக்கிறார். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் நடனத்தின் மீதான ஆர்வத்தால் பால்ராஜ் மூலம் நடனம் கற்கத் தொடங்கினார்.
பின்னர் சிவசங்கர் மாஸ்டரிடம் உதவியாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றத் தொடங்கி அதன் பின்னர் பிரபல நடன இயக்குனர் ராஜு சுந்தரம் மாஸ்டரிடம் 5 ஆண்டுகள் நடன உதவியாளராக பணியாற்றினார். இவர் தமிழில் திருவிளையாடல் ஆரம்பம் திரைப்படத்தின் மூலம் நடன இயக்குனராகத் தனது பணியை தொடங்கினார்.

தமிழில் ஸ்டார் நடிகரான ரஜினிகாந்த் , விஜய் , அஜித் குமார் , சூர்யா , தனுஷ் , சித்தார்த் , கார்த்தி , விஜய் சேதுபதி , பிரபுதேவா , விஷால் போன்ற நடிகர்களுடன் நடனம் ஆடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கிலும் நாகார்ஜுனா , மகேஷ் பாபு , ராம் சரண் , வருண் சந்தேஷ் என பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடனமாடியிருக்கிறார்.
இதனிடையே தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வருகிறார் பாபா பாஸ்கர். அந்த நிகழ்ச்சியில் நடிகை சங்கீதா பாபா பாஸ்கரின் டீனேஜ் நடனம் குறித்து பேசினார்.
அப்போது பாபா, நான் சங்கீதாவுக்கு அப்போவே ஸ்கெட்ச் போட்டேன். ஆனால் மிஸ் ஆகிடுச்சு என மறைச்சு வைத்திருந்த காதலை மேடையிலே போட்டு உடைத்ததோடு லைட்டா கண் கலங்கிவிட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக அவர் உண்மையிலே சங்கீதாவை காதலித்திருக்கிறார் என பலரும் கூறி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ லிங்க்: