அப்போ எல்லாம் நடிப்பா.. தீபிகா படுகோனே கர்ப்பமாக இருப்பதாக நாடகம்?..

Author: Vignesh
14 August 2024, 4:48 pm

தீபிகா படுகோன் கடந்த பிப்ரவரி மாதம் தான் கர்ப்பமாக இருந்ததாகவும் செப்டம்பர் மாதம் குழந்தை எதிர்பார்ப்பதாக இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் அறிவித்திருந்தார். திருமணம் ஆகி 6 ஆண்டுகள் கழித்து தீபிகா கர்ப்பமானதால் அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதற்கு முன்பே, அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்து கொண்ட தீபிகா கர்ப்பமாக இருப்பதாக கூறி புகைப்படங்களும் வைரலான நிலையில், அவர் இன்ஸ்டா போஸ்ட் மூலம் தனது கர்ப்பத்தை தற்போது உறுதி செய்தார்.

இதனிடையே, சிங்கம் அகெய்ன் திரைப்படத்தின் ஷூட்டிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி சர்ச்சையும் கிளப்பியது. அந்த வீடியோவில், போலீஸ் உடையில் இருக்கும் தீபிகாவிடம் கர்ப்பத்திற்கான அறிகுறிகள் எதுவுமே இல்லை எனவும், அவர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள இருப்பதாகவும், பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

மேலும், கர்ப்பமாக இருந்தால் எப்படி சண்டை காட்சிகளில் நடிக்க முடியும் என்ற கேள்வியும் எழுப்பி வந்தனர். மேலும், சிலர் ஐந்து மாதங்களில் எவ்வளவு பெரிய பேபி பம்ப் வர வாய்ப்பே இல்லை என்றும், தீபிகா கொஞ்சம் கூட எடை அதிகரிக்கவே இல்லை. எனவே, அது செயற்கையான பேபி பம்ப் எனவும், கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருந்தனர்.

அதேபோல், சமீபத்தில் கல்கி படத்தின் பிரமோஷனுக்கு வயிற்றில் குழந்தையுடன் தீபிகா கலந்து கொண்டார். ஆனால், கர்ப்பமாக இருக்கும் போது அவர் ஹைசில் வந்தது குறித்தும் சிலர் சமூக வலைதளங்களில் விமர்சித்து இருந்தனர். இந்நிலையில், தான் இவர் கர்ப்பிணி போல் நடிப்பதாகவும், தீபிகாவின் வயிறு கர்ப்பிணி வயிறு போல் இல்லை. இது போலியான வயிறு என்றும், பலரும் கூறி வருகின்றனர். ஒவ்வொரு முறையும் அவரின் வயிறு வித்தியாசமாக தெரிகிறது.

தீபிகா உண்மையில் கர்ப்பமாக இருக்கிறாரா இல்லை. கர்ப்பமாக இருப்பது போல் நடித்துவிட்டு பின்பு வாடகை தாய் மூலம் யாருக்கும் தெரியாமல் இரகசியமாக குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்துவிட்டாரா என்ற பல கேள்விகளும் அவர் மீது எழுந்து வருகிறது. இந்நிலையில், இதற்கு பிரபல ivf நிபுணரான டாக்டர். கௌரி அகர்வால் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

அதில், அவர் தீபிகாவின் கர்ப்பம் பல சந்தேகங்களை எழுப்பி வருகிறது. கர்ப்பமாக இருக்கும் வயிற்றுடன் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும், அவரின் வயிறு போலி கர்பமாக, இருக்க வாய்ப்புகள் அதிகம் என்று கூறியுள்ளார். மேலும், இந்தியாவில் IVF செய்வதற்கு பல சட்டங்கள் மற்றும் விதிகள் உள்ளன. தற்போது, இவருக்கு 38 வயது ஆகிறது.

தற்போது, வாழ்க்கை முறையில் இந்த வயதில் குழந்தை பிறக்கும் வாய்ப்புகள் குறைவு. அதனால், தீபிகா படுகோன் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்து. இந்த மாதிரியான செயல்களில் ஈடுபடலாம் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தான் ரசிகர்கள் தீபிகா படுகோனே உண்மையில் கர்ப்பமாகத்தான் இருக்கிறாரா அல்லது கர்ப்பமாக இருப்பது போல் நடிக்கிறாரா என்ற கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.

  • Rape with the actress in the shooting.. Attempt to commit suicide படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!